Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
மத்தியபிரதேசத்தின் சோலாப்பூரில் இருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை ரயிலை இயக்கிய முதல் பெண் வந்தே பாரத் ஓட்டுநர் சுரேகா.
Fact
பரவுகின்ற தகவல் தவறானதாகும். அவர் மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூரில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரையில் வந்தே பாரத் ரயிலை இயக்கினார்.
வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்ற சுரேகா யாதவ், அதை மத்தியபிரதேசத்தின் சோலாப்பூரில் இருந்து இயக்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுரேகா யாதவ்! மத்தியபிரதேசத்தின் சோலாப்பூரில் இருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை ரயிலை இயக்கிய சுரேகாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டு” என்று செய்தி வெளியிட்டுள்ளது சன் நியூஸ். இதனைப் பலரும் பகிர்ந்த் வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகளா இவை?
வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்று பெருமையைப் பெற்ற சுரேகா யாதவ், அதை மத்தியபிரதேசத்தின் சோலாப்பூரில் இருந்து இயக்கியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இந்திய ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ வாழ்த்து செய்தியில், “Smt. Surekha Yadav, Loco Pilot cruising the first female driven Vande Bharat train from CSMT, Mumbai to Solapur through the steepest Bhor Ghat between Mumbai & Pune in Maharashtra.” என்று தெரிவித்துள்ளது.
சோலாப்பூர் என்பது மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும்.சுரேகா இயக்கிய வந்தே பாரத் ரயில் வழித்தடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரையில் இயக்கப்படுகிறது இந்த வந்தே பாரத் ரயில்.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்தி இதழ்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்று பெருமையைப் பெற்ற சுரேகா யாதவ், அதை மத்தியபிரதேசத்தின் சோலாப்பூரில் இருந்து இயக்கியதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Twitter Post From, Ministry Of Railways, Dated March 15, 2023
Twitter Post From, NDTV, February 10, 2023
RailYatri.in
Solapur Govt Website
News Report From, Hindustan Times
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 21, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 5, 2024