Fact Check
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு முன் பயணி வெளியிட்ட வீடியோவா இது?
Claim
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு முன் பயணி வெளியிட்ட பேஸ்புக் லைவ் வீடியோ.
Fact
இத்தகவல் தவறானதாகும். நேபாளத்தில் 2023 ஜனவரியில் விமான விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விமானத்தில் உயிரிழந்த பயணியின் வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
“இதயத்தை உடைக்கும். ஏர் இந்தியா விமானம் AI171 சம்பந்தப்பட்ட குஜராத்தின் அகமதாபாத் அருகே சோகமான விமான விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு பயணி ஒருவரின் பேஸ்புக் லைவ் வீடியோ வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு முன் பயணி வெளியிட்ட பேஸ்புக் லைவ் வீடியோ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் @jaganbimal என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் நேபாள நாட்டின் விமான விபத்தில் 72 பேர் உயிரிழந்ததாக கூறி வைரலாகும் இதே வீடியோவை ஜனவரி 15, 2023 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் மோஜோ ஸ்டோரி எனும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. ஜனவரி 15, 2023 அன்று நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும், விமான விபத்து ஏற்படுவதற்கு முன் இவர்கள் ஃபேஸ்புக்கில் நேரடியாக வீடியோ வெளியிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வீடியோவானது ஜனவரி 16, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் ஜனவரி 16, 2023 அன்று இந்தியா டுடே ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களும் இதே தகவலுடன் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் அகமதாபாத் விமான விபத்துக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
Also Read: செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றதா ரிசர்வ் வங்கி?
Conclusion
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு முன் பயணி வெளியிட்ட பேஸ்புக் லைவ் வீடியோ என்று பரவும் வீடியோ 2023 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். நேபாள நாட்டில் ஏற்பட்ட விபத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By @jaganbimal, Dated January 15, 2023
YouTube Post By Mojo Story, Dated January 16, 2023
Facebook Post By India Today, Dated January 16, 2023
(இச்செய்தி நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது. எழுதியவர் வசுதா பெரி)