பிப்ரவரி 8 ஆம் தேதியன்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட மாட்டாது என்பதாக முன்னணி தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததாகப் புகைப்படம் ஒன்று நமக்கு வாட்ஸ் அப் உண்மையறியும் சோதனைக்காக வாசகர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

Fact Check/Verification:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கிக் கிடந்த தமிழகம், படிப்படியாக அதிலிருந்து மீளத் துவங்கி உள்ளது.
கடந்த பல மாதங்களாகவே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையற்று மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பித்தல், தேர்வுகள் நடத்தப்படுவது ஆகிய செயல்பாடுகள் நடைபெற்றன.
இந்நிலையில், ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
மேலும், அதே நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல், தொழில்நுட்ப, கலை, அறிவியல் கல்லூரிகளும் செயல்படத் துவங்கும் என அரசு அறிவித்துள்ளது.
இச்சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது புகைப்படத்துடன் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படமாட்டாது என்பதாக செய்தி ஒன்று வெளியானதாக புகைப்படம் ஒன்று நம்முடைய உண்மையறியும் சோதனைக்கு வந்திருந்தது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
தமிழகத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்று செய்தி வெளியானதாகப் பகிரப்பட்ட அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வருகின்ற 8 ஆம் தேதியன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன என்கிற அறிவிப்பை நாம் கண்டறிந்தோம்.
மேலும், குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளில் துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்வின் டெம்ப்ளேட்டை பிரதியெடுத்து அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் ஒன்றினைப் பொருத்தி குறிப்பிட்ட அப்போலி புகைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து குறிப்பிட்ட அச்செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியும் நமக்குக் கிடைத்தது.
Conclusion:
எனவே, பிப்ரவரி 8 ஆம் தேதியன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என்பதாகப் பரவிய அப்புகைப்படம் போலியானது; சித்தரிக்கப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
CMOTamilNadu: https://twitter.com/CMOTamilNadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)