Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பங்களாதேஷில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள வைத்தனர்.

Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?
பங்களாதேஷில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாக கூறி பரவும் வீடியோ குறித்த உண்மையறிய, அவ்வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘சோமோய் டிவி புல்லட்டின் (Somoy TV Bulletin)’ என்ற யூடியூப் பக்கத்தில் போராட்டத்திற்கிடையே மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டதாக கூறி ஜூலை 16, 2024 அன்று வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதியை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதாவது பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு முன்னரே இவ்வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.


வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தப்பின் அதற்கு எதிராக பல்கலை கழக மாணவர்கள் கடந்த ஜூலை மாதத்தில் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போராட்டத்தின் இடையிலேயே மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். சோமோய் டிவியின் இணையத்தள பக்கத்திலும் இத்தொழுகை குறித்த செய்தி புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த நிகழ்வானது வங்கதேசத்தின் பஷுந்தரா கேட் பகுதியில் நடந்ததாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் தாக்கா பிரஸ் எனும் இணைய ஊடகத்திலும் பஷுந்தரா கேட் பகுதியில் நடந்த இந்த தொழுகை குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இட ஒதுகீடுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போரட்டத்திற்கு இடையில் தொழுகை செய்துள்ளனர் எனவும், அந்த நிகழ்வையே திரித்து இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததாக பரப்பி வருகின்றனர் எனவும் தெளிவாகின்றது.
இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?
Sources
Youtube video, SomoyTVBulletin, July 16, 2024
SomoyTV news report, July 16, 2024
Dhaka Press report, July 16, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Sabloo Thomas
November 12, 2025
Ramkumar Kaliamurthy
October 27, 2025
Ramkumar Kaliamurthy
October 28, 2023