Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கேரளாவில் முஸ்லீம் பெண் வேட்பாளரின் படத்திற்கு பதிலாக அவரின் கணவர் படத்தை பயன்படுத்தி ஓட்டு கேட்கப்பட்டதாக பரவும் பதாகை.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: ‘பேசாமல் ஏமாற்றிய தலைவா’ என்று விஜயை கூறினாரா தவெக நிர்வாகி?
கேரளாவில் முஸ்லீம் பெண் வேட்பாளரின் படத்திற்கு பதிலாக அவரின் கணவர் படத்தை பயன்படுத்தி ஓட்டு கேட்கப்பட்டதாக பரவும் படத்தில் ‘சக்கரக்குடம் கிராமப் பஞ்சாயத்து’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரளா உள்ளாட்சி துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடியதில் இவ்வாறு ஒரு பஞ்சாயத்தே காணப்படவில்லை.

அதேபோல் அந்த பதாகையில் PPDP எனும் கட்சியின் பெயர் இடம்பெற்றிருந்தது. நம் தேடலில் அப்பெயரில் எந்த ஒரு கட்சியும் இடம்பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் பதாகை குறித்து ஆராய்கையில் அப்பதாகை வெள்ளரிப்பட்டணம் எனும் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற பதாகை என அறிய முடிந்தது.
மஞ்சு வாரியர் மற்றும் சௌபின் சாபிர் நடித்த இத்திரைப்படம் 2023ல் வெளியானது. இத்திரைப்படமானது அம்ரிதா மூவீஸ் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அத்திரைப்படத்தின் 1:19:30 நேரத்தில் வைரலாகும் பதாகை தொடர்பான காட்சி இடம்பெற்றிருந்தது.

Also Read: திரிஷாவின் செல்ஃபியின் பின்புறம் தவெக துண்டு கிடப்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் திரைப்படத்தில் இடம்பெற்ற கற்பனை காட்சியை உண்மை என்று பரப்பி வருகின்றனர் என அறிய முடிகின்றது.
இந்த ஃபேக்ட்செக் கட்டுரையானது நியூஸ்செக்கர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Sources
Kerala Local Self Government Department (Official Website)
Amrita Movies YouTube Channel: Vellaripattanam (2023) Malayalam Movie
Ramkumar Kaliamurthy
October 28, 2023
Ramkumar Kaliamurthy
October 9, 2025
Ramkumar Kaliamurthy
October 8, 2025