Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்து சடங்குகளின்படி விளக்கேற்றியதால் இந்து மதத்தை சார்ந்த மனைவியை இஸ்லாமிய மதத்ததை சார்ந்த கணவர் தாக்கினார்.
வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களேயாவர். இச்சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை.
“பெங்களூருவில் ஒரு பெண் ஐடி நிபுணர் முகமது முஷ்டாக்கை மணந்தார். அவர்கள் தங்கள் குழந்தையின் பிறந்தநாளில் இந்து சடங்குகளின்படி விளக்கேற்றினர். அவர் அவளை எப்படி நடத்தினார் என்று பாருங்கள். இதை ஒவ்வொரு இந்து பெண்ணும், முழு நாடும் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் பனையூரில் பதுங்கியதாக விமர்சனம் செய்தாரா நடிகர் சூரி?
இந்து சடங்குகளின்படி விளக்கேற்றியதால் இந்து மதத்தை சார்ந்த மனைவியை இஸ்லாமிய மதத்தை சார்ந்த கணவர் தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் ராஜ்ய சபா உறுப்பினரான ஸ்வாதி மலிவால் இதே வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டோபர் 3, 2022 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
வன்முறையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சமயத்தில் கர்நாடக முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மைக்கு ஸ்வாதி மலிவால் எழுதிய கடிதமும் இப்பதிவில் காணப்பட்டது.

தொடர்ந்து தேடுகையில் இந்தியா டுடே ஊடகத்தில் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஆயிஷா என்று தெரிவித்திருப்பதை காண முடிந்தது.
செய்தியில் காணப்பட்ட வீடியோவில் அந்நபரிடமிருந்து தற்போது பிரிந்து வாழ்வதாகவும், அந்நபர் மறுமணம் செய்து கொண்டார்; இருப்பினும் விவாகரத்து தர மறுப்பதாகவும் ஆயிஷா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தேடுகையில் “Karnataka HC Quashes Man’s Plea for His Child Custody, Orders Him to Pay Compensation of Rs 50,000” என்று குறிப்பிட்டு நியூஸ் 18 ஊடகத்தில் செய்தி ஒன்று டிசம்பர் 28, 2021 அன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் ஆயிஷாவின் கணவர் பெயர் முகமது முஷ்தாக் என்று குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது.

முஸ்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அவருக்கு தர வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்ததோடு, ஆயிஷாவுக்கு 50000 ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று உத்தரவிட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இத்தீர்ப்பு குறித்து “judgments.ecourts.gov.in” இணையத்தளத்தில் தேடுகையில் ஆயிஷா, முஷ்தாக் ஆகிய இருவரும் சுன்னி முஸ்லீம்கள் என்று தெளிவாக குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து ஆயிஷா பானுவின் வழக்கறிஞர் நயீம் பாஷாவை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு பேசுகையில் அவரும் இவ்விருவரும் முஸ்லீம்கள் என்று உறுதி செய்தார்.
Also Read: விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரவும் படம் உண்மையானதா?
இந்து சடங்குகளின்படி விளக்கேற்றியதால் இந்து மதத்தை சார்ந்த மனைவியை இஸ்லாமிய மதத்தை சார்ந்த கணவர் தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ தகவல் தவறானதாகும்.
உண்மையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களேயாவர். இச்சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இதே தகவல் 2022 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து நியூஸ்செக்கர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இதுக்குறித்து ஆராய்ந்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
Sources
Instagram post by Swati Maliwal, Rajya Sabha MP, dated October 3, 2022
Report by India Today, dated October 4, 2022
Report by News 18, dated December 28, 2021
judgments.ecourts.gov.in
Phone conversation with Naeem Pasha S, the lawyer of Ayesha Banu
Ramkumar Kaliamurthy
October 28, 2023
Ramkumar Kaliamurthy
October 9, 2025
Ramkumar Kaliamurthy
October 8, 2025