Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்ளில் பரவி வருகின்றது.
‘கட்டணமில்லா பேருந்து திட்டம் ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு… அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் விடியல் அரசு’ என்று தலைப்பிட்ட பத்திரிக்கை செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரை முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதாக பரவும் வீடியோ!
Fact Check/Verification
கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்ளில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக அரசு தரப்பிலிருந்து கட்டணமில்லா பேருந்து திட்டம் ரத்து என்றோ, அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு என்றோ ஏதேனும் உத்தரவுகள் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளதா என்று தேடினோம். இதில் இவ்வாறு எந்த ஒரு உத்தரவும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை என்பதை அறிய முடிந்தது.
இதனையடுத்து தொடர்ந்து தேடியதில் கடந்த சனியன்று (டிசம்பர் 10) போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நிறுத்தப்போவதாக பரவும் தகவல் முற்றிலும் தவறான வதந்தி என்று தெளிவுப்படுத்தியுள்ளதை காண முடிந்தது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் இப்பேட்டியில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தேடியதில், அண்டை மாநிலங்களில் கட்டணம் உயர்வு ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கின்றார் என்று கடந்த வியாழனன்று (டிசம்பர் 8) அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதை காண முடிந்தது.
இவற்றின் அடிப்படையில் காண்கையில் கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு என்று சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிகின்றது.
இதனையடுத்து இத்தகவலை யார் பரப்பினார் என்று தேடும்போது நியூஸ் 4 தமிழ் எனும் ஆன்லைன் ஊடகத்தில் இச்செய்தி வெளிவந்திருந்ததை காண முடிந்தது.
ஆகவே நியூஸ் 4 தமிழ் ஊடகத்தின் ஆசிரியரை தொடர்புக் கொண்டு எதனடிப்படையில் இச்செய்தி வெளியிடப்பட்டது என்று விசாரித்தோம். அதற்கு அவர், தற்போது இந்நிகழ்வு நடக்கவில்லை. ஆனால் வருங்காலத்தில் இது நடக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையாக வைத்தே இச்செய்தியை நாங்கள் வெளியிட்டோம் என்று பதிலளித்தார்.
இதன் அடிப்படையில் பார்க்கையில் இச்செய்தி யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதேயொழிய ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்டது அல்ல என்பதை அறிய முடிகின்றது.
Also Read: வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
Conclusion
கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு என்று சமூக வலைத்தளங்ளில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Youtube Video, from Shalini channel, on December 10, 2022
Youtube Video, from Vanakkam Thalaimurai, on December 8, 2022
Phone Conversation with Roopa, News 4 Tamil, on December 13, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.