இந்த ஆண்டு (2021) கொரோனா இரண்டாம் அலை, தமிழக சட்டமன்றத் தேர்தல், ஆட்சி மாற்றம், கட்சிகளுக்கு இடையேயான பனிப்போர் என பல நிகழ்வுகளும், அதை ஒட்டிய பல பொய் செய்திகளும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
இந்த பொய் செய்திகளை நம் நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து, அவை பொய்யானவை என்று தக்க ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
இதில் சிறந்த பத்து செய்திகளை உங்கள் பார்வைக்கு பட்டியலிட்டுள்ளோம்.
#1 இந்தியன் ஆயில் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதா?

இந்தியன் ஆயில் நிறுவனம் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#2 யோகி ஆதித்யநாத் வருகைக்காக பாஜக தொண்டர்களின் தாமரை உருவாக்கம் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?

யோகி ஆதித்யநாத், உத்திரபிரதேச முதல்வரான இவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக கேரளா வந்ததையொட்டி தொண்டர்கள் இணைந்து தாமரை சின்னத்தை அமைத்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#3 சீமான் பாஜகவினருடன் ரகசிய ஒப்பந்தமிட்டாரா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பாஜகவினரை சந்தித்து ரகசிய ஒப்பந்தமிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#4 கிராம்பு, கற்பூரம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவை இணைந்து அவசர நேர ஆக்ஸிஜனுக்கு உதவுகின்றனவா?

கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைல எண்ணெய் சொட்டுகள் அடங்கிய சிறு பைகள் மூலமாக ஆம்புலன்ஸ்களில் அவசர கால ஆக்ஸிஜனை உருவாக்க முடியும் என்று புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#5 பால் விலையை திமுக அரசு 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்ததா?

பால் விலையை, தற்போது ஆட்சியில் அமைந்துள்ள திமுக அரசு 6 ரூபாய் ஏற்றி பின்னர் 3 ரூபாய் குறைத்ததாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#6 தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர டிசி தேவையில்லை; EMIS எண் மட்டும் போதும் என்று பரவும் தகவல் உண்மையா?

தனியார் பள்ளியில் இருந்து ஒரு மாணவரை அரசு பள்ளிக்கு மாற்றும்போது அவர்களுடைய மாற்றுச்சான்றிதழ் எனப்படும் டிசி தேவையில்லை; ஆதார் எண் அல்லது EMIS எண் இருந்தால் மட்டும் போதும் என்பதாக வைரல் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#7 ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா?

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று நடிகர் சூர்யா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#8 கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?

கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருக்கின்றது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#9 உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற வீராங்கனைகளின் புகைப்படங்கள்!

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் அவர்களின் புகைப்படம் என்று புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#10 ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுக்குறித்து முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)