பாஜக பெண் நிர்வாகி டெய்சி சரணுடன் அதே கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா ஆபாசமாக பேசுவதாக வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இதை பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதுக்குறித்த அவரது கருத்தை பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி, கட்சி பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதனையடுத்து அடுக்கடுக்காக காயத்ரி ஜெயராம் குறித்து பல பொய் செய்திகள் பரவத் தொடங்கியது. அவற்றை நியூஸ்செக்கர் சார்பில் முறையாக ஆய்வு செய்து, அவை பொய் செய்திகள் என்று நிரூபித்திருந்தோம்.
அவற்றின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு

Claim 1: அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறினார்.
Factcheck: அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்றாரா காயத்ரி ரகுராம்?

Claim 2: பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறினார்.
Factcheck: பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்றாரா காயத்ரி ரகுராம்?

Claim 3: பாஜக நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறினார்.
Factcheck: பாஜக நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்றாரா காயத்ரி ரகுராம்?

Claim 4: அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறினார்.
Factcheck: அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்றாரா காயத்ரி ரகுராம்?

Claim 5: அண்ணாமலையின் தூண்டுதலின் காரணமாகவே டெய்சி சரணுக்கு திருச்சி சூர்யா கொலை மிரட்டல் விடுத்தார் என்று காயத்ரி ரகுராம் கூறினார்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)