திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact Checkபாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்றாரா காயத்ரி ரகுராம்?

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்றாரா காயத்ரி ரகுராம்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி, கட்சி பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், ‘பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகள், தவறுகளை சுட்டிக்காட்டியதாலேயே நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். பாஜகவினரின் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அண்ணாமலை முழுவதுமாக துணை போகிறார்’ என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01
Screenshot from Twitter @ARUNPYDMK
பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Screenshot from Facebook / பரளி தங்கம்
பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 03
Screenshot from Facebook / abu.lukmaan.33

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?

Fact Check/Verification

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று  வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் காயத்ரி ரகுராம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தை அறிய முடிந்தது.

இச்சந்திப்பில் காயத்ரி ரகுராம் எந்த ஒரு இடத்திலும் அண்ணாமலை குறித்து மேற்கண்ட கருத்தை பேசி இருக்கவில்லை. மேலும் பாஜகவில் பெண்கள் பாதுகாப்பு இல்லலையா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேவி எழுப்புகையில்,  நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றோம் என்று காயத்ரி ரகுராம் பதிலளித்திருந்ததை காண முடிந்தது.   

இதனையடுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.  இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல்  பொறுப்பாளர் இவானி அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்கையில், அந்த நியூஸ்கார்ட் போலியானது என்று அவர் தெளிவு செய்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று புதிய தலைமுறை அதன் சமூக ஊடகப் பக்கங்களில் மறுப்பு தெரிவித்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில்,  இத்தகவல் பொய்யானது என்பதை அவரும் தெளிவு செய்தார்.

Also Read: ‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?  

Conclusion

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Facebook post, from Puthiya Thalaimurai, on November 24, 2022
Phone conversation with Ivani, Puthiya Thalaimurai, on November 24, 2022
YouTube Video, from Red Pix, on November 22, 2022
Phone Coversation with Gayathri Raghuram, on November 24, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular