Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனம் கொடுத்ததாக பரவும் வீடியோ.

இதுக்குறித்த பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: கே.என்.நேரு நிர்மலா சீதாராமனுடன் அவசர சந்திப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனம் கொடுத்ததாக கூறி பரப்பப்படும் வீடியோவில் ஷ்ருதி டிவி எனும் யூடியூப் பக்கத்தின் லோகோ மற்றும் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து அந்த யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம். அத்தேடலில் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து கூறும் இரண்டு வீடியோக்கள் இந்த யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. (அவ்வீடியோக்களை இங்கே, மற்றும் இங்கே காணலாம்)
ஆனால் அவ்வீடியோக்களில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ரசிகர்கள் காணப்படவில்லை.
ஆகவே வைரலாகும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என அறிய ஷ்ருதி டிவி யூடியூப் பக்கத்தை தொடர்ந்து ஆராய்ந்தோம். அதில் சிலம்பரசன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ திரைப்பத்திற்கு இவ்விமர்சனத்தை அந்த ரசிகர்கள் கொடுத்துள்ளனர் என அறிய முடிந்தது.

இதன்படி பார்க்கையில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சன வீடியோவை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனம் கொடுத்ததாக தவறாக பரப்பி வருகின்றன என தெளிவாகின்றது.
Also Read: தமிழக எல்லையில் கேரளாவின் குப்பைகள் கொட்டப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Sources
YouTube video by Shruti TV, dated June 23, 2017
Vijayalakshmi Balasubramaniyan
January 12, 2024
Ramkumar Kaliamurthy
February 21, 2023
Ramkumar Kaliamurthy
January 20, 2023