Entertainment
துணிவின் வசூலை விட வாரிசு அதிகம் வசூலித்துள்ளது என்று கலாட்டா மீடியா செய்தி வெளியிட்டுள்ளதா?
விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல் அஜீத் நடித்த துணிவை விட அதிகம் என்று கலாட்டா மீடியா செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக கருதப்படும் விஜய் மற்றும் அஜீத்தின் திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு கடந்த வாரம் ஜனவரி 11 அன்று திரைக்கு வந்தது. இந்நிலையில் விஜய் நடித்த வாரிசு 210 கோடி வசூலித்ததாகவும், அஜீத் நடித்த துணிவு 100 கோடி கூட வசூலிக்கவில்லை என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அண்ணாமலை பேசியதாகப் பரவும் பேச்சாளர் பெருமாள் மணியின் படையப்பா வெற்றி விழா உரை வீடியோ!
Fact Check/Verification
விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல் அஜீத் நடித்த துணிவை விட அதிகம் என்று கலாட்டா மீடியா செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
கலாட்டா மீடியாவின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று அந்நிறுவனமே தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
ஆனால் உண்மையில் இவ்விரு திரைப்படங்களும் எவ்வளவு வசூலித்தன என தேடியபோது வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலித்ததாக இப்படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்திருந்ததை காண முடிந்தது.
ஆனால் துணிவு எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
Also Read: இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் கனடா வீடியோ!
Conclusion
விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல் அஜீத் நடித்த துணிவை விட அதிகம் என்று கலாட்டா மீடியா செய்தி வெளியிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Facebook Post from Galatta Media Dated January 18, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)