கே.என்.நேரு குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெறும் வேளையில் அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“தனக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துரை சோதனை நடக்கும் வேலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
கே.என்.நேரு நிர்மலா சீதாராமனுடன் அவசர சந்திப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி வெளியிட்டதாக பரவுகிறது. மேலும், ரெய்டு நடைபெறும் வேளையில் அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
எனவே, இதுகுறித்து தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தபோது கடந்த டிசம்பர் 02, 2024 அன்று “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக அமைச்சர் கே.என்.நேரு!” என்று நியூஸ்கார்ட் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே ரெய்டு நடைபெறும் வேளையில் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த கே.என்.நேரு என்று இந்த வைரல் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது. எனவே, இதுகுறித்து தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்று விளக்கமளித்தார்.


மேலும், வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது கடந்த 2024ஆம் ஆண்டு கே.என்.நேரு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஜல் ஜீவன் திட்டத்தில் நிலுவையில் உள்ள 1,706 கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி மனு அளித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இதுகுறித்த செய்திகள் வெளியாகியிருந்ததைக் காண முடிந்தது. அப்புகைப்படமே, அவர் தற்போது நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகப் பரவி வருகிறது.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Conclusion
கே.என்.நேரு நிர்மலா சீதாராமனுடன் அவசர சந்திப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, Thanthi TV, Dated December 02, 2024
X Post By, K.N.Nehru, Dated December 02, 2024
Phone Conversation with, Vinod, Thanthi TV, Dated April 07, 2025