Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
GBU திரைப்படத்தை பார்த்தபின் சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் ரயில்நிலையத்தில் கொண்டாட்டமாக இருந்தனர்.

இதுக்குறித்த பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகினாரா?
சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள குட் பேட் அக்லி (சுருக்கமாக GBU) திரைப்படத்தை பார்த்துவிட்டு ரயில் நிலையம் ஒன்றில் கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டுக்கொண்டு கொண்டாட்டமாக இருந்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனை புகைப்படங்களாக பிரித்து, அவற்றை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் ‘Yokii’ எனும் யூடியூப் பக்கத்தில் ஜூன் 21, 2019 அன்று வைரலாகும் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் கடவுளே அஜித் எனும் கோஷம் இடம்பெற்றிருக்கவில்லை.

இதன்படி பார்க்கையில் ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோவை எடிட் செய்து, அதன் ஆடியோ பகுதி முற்றிலும் மாற்றப்பட்டு வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. சமீபத்தில் வெளியான GBU திரைப்படத்திற்கும் வைரலாகும் வீடியோவிற்கும் தொடர்பில்லை என்பதும் உறுதியாகின்றது.
Also Read: அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Sources
YouTube video by the user named Yokii, dated June 21, 2019