Fact Check
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகினாரா?
Claim
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகினார்.
Fact
இத்தகவல் தவறானது என்று அதிமுக தரப்பும், நியூஸ் தமிழ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தாரா ஜெயக்குமார்?
Fact Check/Verification
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று பதிலளித்தார்.
இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் அந்நிறுவனம் இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து நியூஸ் தமிழ் டிஜிட்டல் துறையை சார்ந்த ராஜேஷை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை நியூஸ் தமிழ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறினாரா?
Conclusion
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone Conversation with Rajesh, News Tamil 24×7