நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடம் என்பதாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான நல்லாட்சி குறியீடு பட்டியலை கடந்த டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். இப்பட்டியலை நிர்வாக சீர்த்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை தயாரித்துள்ளது.
இந்நிலையில், “மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசை பட்டியல் ஒன்று Good Governance Index என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு 18வது இடம். அசாம் முதலிடம்” என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்று பரவும் வதந்தி!
Fact check/Verification
நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடம் என்பதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
டிசம்பர் 25ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட Good Governence Index பட்டியலை ஆராய்ந்தபோது இந்தியா முழுவதிலும் இருந்து வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு மாநிலங்கள் முதலிடம் பெற்றுள்ளன. அவ்வகையில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.


மேலும், குரூப் ஏ, குரூப் பி, வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு.
மேலும்,மொத்த தரவரிசையில் தமிழ்நாடு குரூப்-ஏ பிரிவில் 7 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோன்று, வைரலாகும் செய்தியில் முதலிடம் பிடித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ள அசாம் மாநிலமும் மலைசார் மாநிலங்களின் வளர்ச்சியில் 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
Conclusion
நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடம் என்பதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)