Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்
Fact: வைரலாகும் புகைப்படம் தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்டதாகும்.
வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“எங்குட்டு நின்னு பார்த்தாலும் ஒண்ணுமே புரியலையே..? இது என்ன மாடல் பாலமா இருக்கும்? பாலத்திற்குள் தண்ணீர் போவதற்கான வழியவும் காணோம், பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியே வருவதற்கான வழியவும் காணாம்..? கழகத்தான் வேலையா தான் இருக்கும்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த டிசம்பர் 07ஆம் தேதியன்று கியானி நாட்டின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “Section F streets rehabilitation project still underway.” என்று இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் இந்த சமூக வலைத்தளப்பக்க முகவரியே இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் சரிபார்த்துக் கொண்டோம். குறிப்பிட்ட புகைப்படமே தற்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டதாக பரவி வருகிறது.
Also Read: உதயநிதி தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி உண்மையா?
வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post From, Greater Giyani Municipality, Dated December 07, 2024
Giyani Official Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025