Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைத்ததாக பரவும் படம்
Fact: இத்தகவல் தவறானதாகும். சென்ற வருடம் மயிலாப்பூர் கோவில்கள் சார்பில் நடத்தப்பட்ட கொலு நிகழ்ச்சியை துர்கா ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்நிகழழ்வில் எடுக்கப்பட்ட படத்தை வைத்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது.
“இது யார் வீட்டு கொலு தெரியுமா?? The fellow who said will eradicate sanatana dharma U.Stalin, (TN- CM’s house)…. In their House watching “FLOURISHING SANATANA DHARMA”… அவ அம்மா வெச்ச கொலு!!” என்று குறிப்ப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்?
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைத்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்ததாக கூறி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் இப்படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியானது அக்டோபர் 16, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவரின் எக்ஸ் பக்கத்தில் மயிலாப்பூரில் நடந்த இந்த கொலு குறித்து புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் அக்டோபர் 15, 2023 அன்று பதிவிட்டிருந்தை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் படமும் இடம்பெற்றிருந்தது.
Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைத்ததாக பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படம் சென்ற வருடம் சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from Indian Express Tamil, Dated October 16, 2023
X Post By P.K.Sekar Babu, Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu, Dated October 15, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 19, 2025
Ramkumar Kaliamurthy
December 23, 2024
Vijayalakshmi Balasubramaniyan
December 19, 2024