Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
லயோலாக் கல்லூரியில் நடைப்பெற்ற சர்ச்சையான ஓவியக் கண்காட்சியை சகாயம் ஐஏஎஸ் துவக்கி வைத்ததாக பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் லயோலாக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி ஒன்று நடைப்பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி ஆகிவற்றைத் தாக்கி வரையப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
லயோலா கல்லூரி நிர்வாகம் இச்செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
இப்பிரச்சனையில் அதி தீவிரமாக எதிர்ப்பை பதிவு செய்தவர் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா. இந்த பிரச்சனையைக் குறித்துப் பேசும்போது, இந்த ஓவியக் கண்காட்சியை சகாயம் ஐஏஎஸ் அவர்கள் துவக்கி வைத்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும் அரசு பணியில் இருக்கும் ஒரு அதிகாரி எவ்வாறு இப்படி செய்யலாம் என்றும் அப்போது கேள்வி எழுப்பி இருந்தார்.
இச்சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆனப்பின்பும் இதே குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பியுள்ளார் எச்.ராஜா. அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட இக்குற்றச்சாட்டை எச்.ராஜா அவர்கள் கூறியுள்ளார்.
எச்.ராஜா அவர்கள் சகாயம் ஐஏஎஸ் அவர்களின் மீது எழுப்பி வரும் இக்குற்றச்சாட்டின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முடிவெடுத்தோம்.
கூகுளில் இச்சம்பவம் குறித்து நாங்கள் தேடினோம். எங்கள் தேடலில் “தேசத்தின் நம்பிக்கை” எனும் யூடியூப் சேனலில் சகாயம் ஐஏஎஸ் அவர்கள் ஒரு மேடையில் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. அவ்வீடியோவில் சகாயம் அவர்கள் எச்.ராஜா அவர்களின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
அவ்வீடியோ உங்களுக்காக:
மேலே உள்ள வீடியோவின் மூலம் சகாயம் அவர்களுக்கும் ஓவியக் கண்காட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது நமக்கு தெளிவாகிறது. ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் இவ்வீடியோவில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.
மேலும் சகாயம் அவர்கள் பேசும் வீடியோவில் அவரின் பின்புறத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டுள்ளது. அதில் ஜனவரி 27, 2019 என்ற வாசகம் இருப்பதை நம்மால் காண முடிகிறது.
இதன்மூலம் லயோலாக் கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை எழுப்பப்பட்ட சில தினங்களிலேயே இதை பேசியுள்ளார் என்பது நமக்குத் தெளிவாகிறது.
நம் தேடலில், எச்.ராஜா அவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சகாயம் ஐஏஎஸ் அவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வைத்தபோது, அப்போதே இதற்கான விளக்கத்தை சகாயம் அவர்கள் தந்துவிட்டார் என்பதையும், எச்.ராஜா அவர்கள் தேவையில்லாமல் இன்னும் இவ்விஷயத்தை பேசிக் கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் சகாயம் ஐஏஎஸ் அவர்கள் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் இடம்பெற்ற லயோலாக் கல்லூரியின் ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்கவில்லை என்றும் எச்.ராஜா அவர்கள் வைத்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என்றும் தெளிவாகியுள்ளது.
Win News YouTube Channel: https://www.youtube.com/watch?v=IyZtL177iGE
Red Pix 24×7 YouTube Channel: https://www.youtube.com/watch?v=l-kPSvd6iPI
Twitter Profile: https://twitter.com/ShefVaidya/status/1086949647145349120
Twitter Profile: https://twitter.com/BUSHINDIA/status/1086939145677623297
Desaththin Nambikkai YouTube Channel: https://www.youtube.com/watch?v=6MPYaA2rvqo
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 25, 2025
Ramkumar Kaliamurthy
March 25, 2025
Ramkumar Kaliamurthy
January 31, 2025