நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல என்று பாஜக மூத்தத்தலைவர் எச்.ராஜா பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் எச்.ராஜா பேசிய இப்பேச்சின் முழுப்பகுதி மாலைமலர் யூடியூப் பக்கத்தில் நேற்றைய முன்தினம் (மார்ச் 23) பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் (8:02 நேரத்தில்) கால்டுவேல் எழுதிய திருநெல்வேலி சாணார்கள் (The Tinnevelly Shanars) என்கிற புத்தகத்தில் நாடார்கள் தமிழர்கள் அல்ல; அவர்கள் இலங்கையிலிருந்து வந்து குடிபுகுந்த வந்தேறிகள் என்று எழுதியிருப்பதாக ஹெ.ராஜா பேசி இருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் கால்டுவேல் புத்தகத்தில் நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல என்று எழுதப்பட்டிருப்பதாக ஹெச்.ராஜா பேசிய வீடியோவில் ஒரு குறிப்பிட்ட 4 வினாடி வீடியோவை மட்டும் வெட்டி வைரலாகும் இத்தகவல் பரப்பப்படுவதை அறிய முடிகின்றது.
இதனையடுத்து தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக அணியின் மாநில பொறுப்பாளர் எம்.எஸ்.பாலாஜியை தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தார்.
இதனையடுத்து ராஜா குறிப்பிட்ட புத்தகத்தில் நாடார் சமுதாயத்தினரை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளதா என தேடினோம். அத்தேடலில் அப்புத்தகத்தின் (The Tinnevelly Shanars) 4 ஆம் பக்கத்தில் சாணார்கள் எனும் இனக்குழுவினர் இலங்கையிலிருந்து வந்ததாகவும், அக்குழுவில் ஒரு பகுதியினர் ‘நாடன்கள்’ என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: காலில் விழுந்து லஞ்சம் வாங்கிய போலீசார்; வைரலாகும் வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?
Conclusion
நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். கார்டுவேல் எழுதிய புத்தகத்தில் இவ்வாறு எழுதி இருப்பதாக எச்.ராஜா பேசிய வீடியோவே இவ்வாறு எடிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Maalai Malar, Dated March 23, 2025
Phone conversation with M.S.Balaji, State Convenor, Social Media Cell, Tamilnadu BJP
Tamildigitallibrary.in