Friday, December 19, 2025

Fact Check

1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலைய புகைப்படம் என்று பரவும் தகவல் உண்மையா?

banner_image

Claim: 1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலைய படம்

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் பெங்களூரு HAL விமானநிலையம் ஆகும்.

1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலைய படம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“1921 இல் மதுரை ஏர்போர்ட்டின் அழகிய தோற்றம்!அப்போது இதன் பெயர் “சொக்கநாதர் விமான நிலையம்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from Facebook/TamilNadu.Politicals

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/Rajeshkumar

Facebook Link

Screenshot from Facebook/jabu.yasmin.9

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?

Fact Check/Verification

1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலைய படம் என்று பரவும் புகைப்பட தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் பதிவினை முதலில் யார் பதிவிட்டது என்று ஆராய்ந்தபோது வெங்கடேஷ் ஆறுமுகம் என்கிற நகைச்சுவை கலைஞர் இந்த பதிவினை தனது சமூக வலைத்தளத்தளப்பக்கத்தில் கேலியாக பதிவிட்டுள்ளார். ஆனால், இப்பதிவு உண்மையானது என்பதாக பரவ ஆரம்பித்தவுடன் அதை நீக்கிவிட்டார். இதனை உறுதி செய்து கொண்டோம்.

தொடர்ந்து, மதுரை விமான நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று ஆராய்ந்தபோது 1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ராயல்ஸ் விமானதளமாக தொடங்கப்பட்ட மதுரை விமான நிலையம் பின்னர் 1952ல் பயணிகள் விமான நிலையமாக மாற்றப்பட்டது என்று இந்திய விமான நிலைய ஆணையக இணையதளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, வைரல் பதிவில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தை ஆராய்ந்தபோது அது பெங்களூரு HAL விமான நிலையத்தின் 1947ஆம் ஆண்டு புகைப்படம் என்பதும், HAL Aerospace கண்காட்சியகத்தில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்றும் Flickr பக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது.

Also Read: மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தாரா ஸ்டாலின்?

Conclusion

1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலைய படம் என்று பரவும் புகைப்பட தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Website of Airport Authorities of India


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage