Fact Check
மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்களா?
Claim
நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து பாடிய கந்த சஷ்டி கவசம்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து பாடிய கந்த சஷ்டி கவசம் :-
தமிழகத்தின் அடுத்த இந்து சனாதனிகள் மனம் உருகி அருமையாக பாடிய கந்த சஷ்டி கவசம்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கந்துவட்டி கொடுமையால் மரத்தில் கட்டப்பட்ட பெண் என்று பரவும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததா?
Fact Check/Verification
மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடியதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 04, 2022 அன்று ”100 கல்லூரி மாணவிகள் ஒன்றாக பாடிய கந்த சஷ்டி கவசம்” என்று இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்ந்தபோது கடந்த அக்டோபர் 2022ஆம் ஆண்டு, வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கிய நிலையில் அதில் கலந்துகொண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவர் 108 பேர் கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு துவங்கி வைத்தார்.
குறிப்பிட்ட நிகழ்வின் வீடியோவே தற்போது மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டினை முன்னிட்டு மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பரவி வருகிறது.
Also Read: திருவண்ணாமலை கோவிலில் அசைவம் உண்டதை நியாயப்படுத்தி பேசினாரா சேகர் பாபு?
Conclusion
மதுரை முருகன் மாநாட்டை முன்னிட்டு 100 கல்லூரி மாணவிகள் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடியதாக பரவும் வீடியோ 2022ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Aalaya TV, Dated November 04, 2022
YouTube Video From, Thanthi TV, Dated October 29, 2022