Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு மறுப்புக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
மருத்துவப் படிப்புகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மாணவர்களுக்கு மத்தியத் தொகுப்பிலிருந்து 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கில் அக்டோபர் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், மருத்துவப் படிப்புகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மாணவர்களுக்கு இந்தாண்டு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இத்தீர்ப்புக் குறித்து கருத்துத் தெரிவிக்கும் விதமாக ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள்,
மருத்துவக் கல்லூரிகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை வழங்க முடியாது என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்தது. திராவிட நோய் பரவுவதற்கு முன்பு இருந்ததுபோல் சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற சட்டத்தையும் பாஜக அரசி இயற்றி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.
என்று கூறியதாக நாரதர் மீடியா நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இத்தகவல் குறித்து ஆராய முடிவு செய்தோம்.
ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் கூறியதாக சொல்லப்படும் இத்தகவல் நாரதர் மீடியாவின் நியூஸ்கார்டில் வந்திருந்ததால், முதலில் நாரதர் மீடியாவின் இணையத்தளத்தில் இவ்வாறு ஒரு செய்தி வந்துள்ளதா என்று தேடினோம்.
ஆனால் அங்கே இதுப்போன்ற ஒரு கருத்தை குருமூர்த்தி அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் காணப்படவில்லை.
இதன்பின் நாரதர் மீடியாவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்ட் பதிவிடப்பட்டிருக்கின்றதா என்பதைத் தேடினோம். ஆனால் அவற்றிலும் இவ்வாறு ஒரு பதிவைக் காண முடியவில்லை.
ஆகவே நாரதர் மீடியாவின் நிர்வாக அதிகாரியை நேரடியாக ஃபோன் மூலம் தொடர்புக் கொண்டு இச்செய்திக் குறித்துக் கேட்டோம்.
அதற்கு அவர்,
நாங்கள் குருமூர்த்தி அவர்கள் குறித்து இதுவரை எந்தச் செய்தியும் வெளியிடவில்லை.
சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது.
மேலும் இவ்வாறு ஒரு செய்தி வந்ததே எங்களுக்குத் தெரியாது.
எங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, இவ்வாறு தவறானத் தகவல் பரப்புபவர்கள மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
என்று பதிலளித்தார்.
இதற்கு பின்பு, நாரதர் மீடியா இச்செய்தி குறித்த மறுப்பை அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டது.
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு மறுப்புக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவலானது முற்றிலும் தவறானது.
இதனை நியூஸ்செக்கர் தமிழின் விரிவான ஆய்வின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
Twitter Prifile: https://twitter.com/thozhar_buddhar/status/1321072968517054464
Twitter Prifile: https://twitter.com/kaderdeen88/status/1321317363204169728
Narathar Media: https://twitter.com/NaratharM/status/1321692500923277313
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)