Fact Check
இஸ்லாமிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இந்து நபர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Claim
இஸ்லாமிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இந்து நபர்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் வரை தடை கோரினாரா சி.வி.சண்முகம்?
Fact
உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இந்து நபர் ஒருவர் இஸ்லாமிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறி வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
நம் ஆய்வில் இச்சம்பவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இக்குற்ற செயலில் ஈடுபட்டவன் பெயர் முகமது ஆதில் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

“போலீசார் அவனை பிடிக்க முயலும்போது துப்பாக்கியால் அவன் போலீசாரை நோக்கி சுட்டான்; போலீசார் பதிலுக்கு சுடும்போது அவன் காலில் அடிபட்டது; இதையடுத்து போலீசார் அவனை கைது செய்தனர்” என்று மொரதாபாத் போலீஸ் எஸ்.பி. குமார் ரன்விஜய் சிங் கூறியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊட்கங்களிலும் இச்சமவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் அக்குற்றவாளியின் பெயர் ஆதில் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து தேடுகையில் மொராதாபாத் போலீஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அக்குற்றவாளியை கைது செய்தது குறித்து முதல் தகவல் அறிக்கையுடன் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அந்த முதல் தகவல் அறிக்கையிலும் குற்றவாளியின் பெயர் ஆதில் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து தேடுகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டியுடன் உத்திரப்பிரதேச போலீஸின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அந்த பதிவிலும் குற்றவாளியின் பெயர் ஆதில் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின் பார்க்கையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டவர் இந்து மதத்தவர் அல்ல; இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் என அறிய முடிகின்றது.
Sources
Report by Times of India, dated August 05, 2025
X post by Moradabad Police, dated August 05, 2025
X post by UP Police, dated August 07, 2025