Friday, April 25, 2025
தமிழ்

Fact Check

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?

banner_image

Claim: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினர்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் இருப்பவர்கள் அனைவரும் இந்துவோ, முஸ்லிமோ இல்லை. அனைவரும் கிறித்தவர் ஆவர். புகைப்படங்களை மார்ஃப் செய்ததாக கூறி ஷாஜி மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பெண்கள் தாக்கியுள்ளனர்.

“கேரளாவில் இந்துப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினர்.

Post Link | Archive Link

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினர்.

Archive Link

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினர்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்கள் உயிரிழப்பு என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என்பதை உறுதி செய்ய வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் மனோரமா வைரலாகும் இவ்வீடியோ குறித்து “11 women arrested over assaulting man who cut ties with Irinjalakuda cult” என்று தலைப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

மனோரமா வெளியிட்டிருந்த இச்செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது யாதேனில்,  கேரளாவின் திருச்சூரில் இருக்கும் முறியாடு பகுதியில் வைரலான இச்சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில் பெண்களின் தாக்குதலுக்கு உண்டானவர்கள் ஷாஜி என்பவரும் அவரின் குடும்பத்தினரும் ஆவர். இக்குடும்பத்தினர் முறியாடு எம்பரர் இம்மானுவல் திருச்சபையில் முன்னர் ஒரு அங்கமாக இருந்துள்ளனர். பிறகு திருச்சபையை விட்டு விலகி, திருச்சபையுடன் உள்ள தொடர்பை துண்டித்துள்ளனர். இதனையடுத்து எம்பரர் இம்மானுவல் திருச்சபைக்கு அருகே ஷாஜி குடும்பத்தினர் காரில் சென்றுக் கொண்டிருக்கும்போது, திருச்சபையை சார்ந்தவர்களின் புகைப்படைங்களை மார்ஃப் செய்து வெளியிட்டதாக கூறி பெண்கள் ஷாஜியையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியுள்ளனர்.

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினர்.
மனோரமாவில் வெளிவந்த செய்தி

தொடர்ந்து தேடியதில் மாத்ருபூமி நியூஸ் இதே செய்தியை ஜனவரி 6, 2023 அன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினர்.
மாத்ருபூமி நியூஸில் வெளிவந்த செய்தி

அதேபோல் வேறு சில ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. அதை இங்கேஇங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து எம்பரர் இமானுவேல் திருச்சபையின் செய்தி தொடர்பாளர் டாக்டர் எடிசனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். “ஷாஜி குடும்பத்தினர் திருச்சபையை விட்டு வெளியேறியவுடன் திருச்சபையை சேர்ந்தவர்களை அவமானப்படுத்த பல வழிகளில் முயன்றனர். ஷாஜி திருச்சபையை சார்ந்த பெண்களின் புகைப்படங்களை மார்ஃப் செய்து வெளியிட்டார். இது பெண்களுக்கு கோபத்தை உண்டாக்கியது” என்று எடிசன் தெரிவித்தார்.

வைரலாகும் சம்பவம் நடந்த பகுதி ஆலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டிருப்பதால் ஆலூர் காவல் நிலையத்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரித்தோம். “மார்ஃப் புகைப்படங்கள் வெளிநாட்டு IP முகவரிகளை பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷாஜி குடும்பத்திற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என விசாரித்து வருகின்றோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

  1. இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் தாக்கப்படவில்லை; திருச்சபை பெண்களின் படங்களை மார்ஃபிங் செய்ததாக கூறியே அவர் தாக்கப்பட்டுள்ளார்.
  2. வைரலாகும் வீடியோவில் அடி வாங்குபவர் இஸ்லாமியர் அல்ல, ஷாஜி எனும் கிறித்தவர் ஆவார். அதேபோல் அவரை அடிக்கும் பெண்களும் இந்துக்கள் அல்ல, முறியாடு எம்பரர் இம்மானுவல் திருச்சபையை சேர்ந்த கிறித்தவ பெண்களாவர்.

Also Read: பங்களாதேஷில் இந்து மாணவர்கள் தாக்கப்பட்டனரா?

Conclusion

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Telephone conversation with Aloor police
Telephone conversation with Dr Edison of Emperor Immanuel Church
Media Reports from OnmanoramaMathrubhumi NewsKairali TVAsainet news, and Reporter TV


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,908

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.