வெள்ளிக்கிழமை, மே 20, 2022
வெள்ளிக்கிழமை, மே 20, 2022

HomeFact Checkவாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்றாரா ஹெச்.ராஜா?

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்றாரா ஹெச்.ராஜா?

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

“காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்தேன். பகவான் கிருஷ்ணன் பாமா, ருக்மணியோடு செய்த லீலைகள் நினைவுக்கு வந்தன. என் பால்ய காலத்துக்கே போய் விட்டேன். நானும் வாலிப வயதில் விஜய் சேதுபதிபோல பிளேபாயாக இருந்தேன்” என்று ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமருக்கு பதிலடி தந்ததாக பரவும் பழைய செய்தி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் ஜூனியர் விகடனில் இந்த நியூஸ்கார்ட் பிரசுரமாகியுள்ளதா என்பதை உறுதி செய்ய, அதன் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, விகடன் ஆசிரியர் அணியை சார்ந்த பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் குறித்து கேட்டோம். இதற்கு அவர், இந்த நியூஸ்கார்ட் முற்றிலும் போலியானது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக சமூக ஊடக அணித் தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்பு கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்கையில், இத்தகவல் பொய்யானது என்று பதிலளித்தார்.

Also Read: மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?

Conclusion

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் முற்றிலு தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False/Fabricated

Source

Newschecker Conversations


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular