பெட்ரோலுக்கான மாநில வாட் வரி விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு பதிலடி தந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் உரையாடினார். இதில் கொரானா தொற்று, பெட்ரோல், டீசல் விலையுயர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின்போது தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர், “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தெலங்கானா அரசு ஒரு பைசா கூட உயர்த்தவில்லை; வரியை அதிகப்படுத்திய முட்டாள்தான் அதை குறைக்க வேண்டும்” என்று பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பெட்ரோலுக்கான மாநில வாட் வரி விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு பதிபதிலடி தந்ததாக பரவும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் சந்திரசேகர் ராவ் பதிலடி கொடுத்ததாக கூறி பரப்பப்படும் செய்தி ஆறு மாதங்களுக்கு முந்திய பழைய செய்தி என்பதை அறிய முடிந்தது.
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் தலா ரூ.5, ரூ.10ஐ குறைத்தது. இதேபோல் மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான மாநில வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதற்கான பதிலையே சந்திரசேகர ராவ் அச்சமயத்தில் தெரிவித்தார்.
இதுக்குறித்த ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே படிக்கலாம்.
Also Read: மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?
Conclusion
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தெலங்கானா அரசு ஒரு பைசா கூட உயர்த்தவில்லை; வரியை அதிகப்படுத்திய முட்டாள்தான் அதை குறைக்க வேண்டும் என்று சந்திரசேகர ராவ் பேசியது உண்மையே, ஆனால் அது தற்போது பேசியது அல்ல, ஆறு மாதங்களுக்கு முன்னதாக பேசியது ஆகும்.
இதனடிப்படையில் பார்க்கையில், பெட்ரோலுக்கான மாநில வாட் வரி விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு பதிலடி தந்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Missing Context/False Context
Source
Sun News
Hindu Tamil
News 18
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)