Authors
Claim: வயநாடு நிலச்சரிவு புகைப்படங்கள்
Fact: வைரலாகும் புகைப்படங்களில் சில கடந்த 2020ஆம் ஆண்டு இடுக்கி நிலச்சரிவில் எடுக்கப்பட்டதாகும்.
வயநாடு நிலச்சரிவு காட்சி என்பதாக புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
“தொடர் மழையின் காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு. 50 க்கும் மேற்பட்டோர் பலி” உள்ளிட்ட செய்திகளுடன் இப்புகைப்படங்கள் பரவுகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பிலும் வயநாடு நிலச்சரிவு குறித்து புகைப்படம் ஒன்று பகிரப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
வயநாடு நிலச்சரிவு காட்சி என்று பரவும் புகைப்படங்கள் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் பகிரப்பட்டிருந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்ட் 09, 2020 அன்று இடுக்கி நிலச்சரிவு குறித்து வெளியாகியிருந்த PTIயின் உதவியுடன் Mint வெளியிட்டிருந்த செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது நமக்குத் தெரிய வந்தது.
மற்றொரு வைரல் புகைப்படம் குறித்து ஆராய்ந்தபோது, அப்புகைப்படமும் இடுக்கி நிலச்சரிவுடன் தொடர்புடையது என்பது 2020ஆம் ஆண்டு செய்தி மூலமாக நமக்கு உறுதியாகியது.
The tribune கடந்த ஆகஸ்டு 09, 2020 அன்று வெளியிட்டிருந்த இடுக்கி நிலச்சரிவு குறித்த வீடியோவில் இந்த இரண்டு புகைப்படங்களுமே இடம்பெற்றிருந்தன. அப்புகைப்படங்களே தற்போது வயநாடு நிலச்சரிவு என்பதாக பகிரப்படுகின்றன.
Also Read: சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
வயநாடு நிலச்சரிவு காட்சி என்று பரவும் புகைப்படங்களில் சில கடந்த 2020ஆம் ஆண்டு இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்டவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report By PTI, Dated August 8, 2020
Report By The News Minute, Dated August 8, 2020
Report By Hindustan Times, Dated August 8, 2020
Report By PTI, Dated August 9, 2020
YouTube Video By The Tribune, Dated August 9, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)