Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
இத்தகவல் தவறானதாகும். சென்ற வருடம் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் ஆல்பத்தின் ‘மா துஜே சலாம்’ பாடலை பாடி மகிழ்ந்தனர். அவ்வீடியோவே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய முன்தினம் இந்தியா பாகிஸ்தானை வென்றதை தொடர்ந்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய வீரர்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் ஆல்பத்தின் ‘மா துஜே சலாம்’ பாடலை பாடி மகிழ்ந்ததாகவும், அதுக்குறித்து வீடியோவை பிசிசிஐ அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்ததாகவும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடியதகாவும், பிசிசிஐ இதுக்குறித்த வீடியோவை அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்ததாகவும் தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் பிசிசிஐ அண்மையில் இவ்வீடியோவை பகிர்ந்ததற்கான எவ்வித தரவும் கிடைக்கவில்லை.
ஆனால் சென்ற வருடம் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்ற தினத்தில் (ஜூலை 4, 2024) வந்தே மாதரம் என்று தலைப்பிட்டு பிசிசிஐ அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இவ்வீடியோவை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டாட் காம் உள்ளிட்ட ஊடகங்களில் இதுக்குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் சென்ற வருடம் ஜூலையில் நடந்த சம்பவத்தை அண்மையில் நடந்ததாக திரித்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவது நிரூபணமாகின்றது.
Also Read: சீமான் கருத்தியல் ரீதியாக பேச மாட்டார்; தனிநபர் தாக்குதல் மட்டுமே செய்வார் என்று காளியம்மாள் கூறினாரா?
பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
சென்ற வருடம் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் ஆல்பத்தின் ‘மா துஜே சலாம்’ பாடலை பாடி மகிழ்ந்தனர். அவ்வீடியோவே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By BCCI, Dated July 04, 2024
Reports from TOI, Hindustan Times, and India.com, Dated July 05, 2024
Vasudha Beri
March 5, 2025
Kushel Madhusoodan
February 28, 2025
Ramkumar Kaliamurthy
October 17, 2023