Fact Check
அரையிறுதி போட்டியில் தோற்றப் பிறகு டிராவிஸ் ஹெட் அழுததாக பரவும் படம் உண்மையானதா?
Claim
அரையிறுதி போட்டியில் தோற்றப் பிறகு டிராவிஸ் ஹெட் அழுததாக பரவும் படம்
Fact
வைரலாகும் படம் AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான படமாகும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று துபாயில் நடந்தது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியா ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக்கரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் அரையிறுதி போட்டியில் தோற்றப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் அவரது மனைவியை கட்டிப்பிடித்து அழுததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அரையிறுதி போட்டியில் தோற்றப் பிறகு டிராவிஸ் ஹெட் அழுததாக பரப்பப்படும் படத்தை கூர்ந்து கவனிக்கையில், வைரலாகும் படத்தில் காணப்படும் இரண்டு காட்சிகளில் டிராவிஸ் அணிந்திருக்கு டீ சர்ட் ஒன்றுக்கொண்டு மாறுபட்டிருப்பதை காண முடிந்தது.
அதேபோல் இரண்டு காட்சிகளிலும் காணப்படும் பெண்களின் முகமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து டிராவிஸ் ஹெட்டின் மனைவி குறித்து தேடினோம். அத்தேடலில் அவர் பெயர் ஜெசிகா ஹெட் என்பதும், அவர் ஒரு மாடல் என்பதும் அறிய முடிந்தது.

வைரலாகும் படத்திலிருக்கும் இரண்டு பெண்களின் முகத்தோற்றத்தை ஜெசிகா ஹெட்டின் முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், இரண்டில் ஒன்று கூட அவர் தோற்றத்துடன் ஒற்றுபோகவில்லை.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் ஏற்பட்டது.
அதை தெளிவு செய்ய வைரலாகும் படத்திலிருக்கும் இரு காட்சிகளையும் Hive Moderation, Sightengine, Wasitai.com உள்ளிட்ட AI அறியும் இணையத்தளங்கள் வாயிலாக பரிசோதித்தோம்.
இந்த சோதனையில் அவ்விரு காட்சிகளும் AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என உறுதியானது.
Hive Moderation:


Sightengine:


Wasitai.com:


Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
அரையிறுதி போட்டியில் தோற்றப் பிறகு டிராவிஸ் ஹெட் அழுததாக பரப்பப்படும் படம் AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான படமாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Jessica Head’s Instagram Page
Hive Moderation Website
Sightengine Website
WasItAI Website
Self Analysis