சனிக்கிழமை, அக்டோபர் 1, 2022
சனிக்கிழமை, அக்டோபர் 1, 2022

HomeFact Checkஉக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் பேசியதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி உண்மையா?

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் பேசியதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி உண்மையா?

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவி ஒருவர் இந்திய தூதரகம் தன்னை மும்பை விமானநிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு அங்கிருந்து எந்த உதவியும் செய்யவில்லை; வீட்டிற்கு செல்ல வாகனம் கூட தானே புக் செய்து கொண்டதாக கூறியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

உக்ரைனிலிருந்து
Source: Twitter

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் இந்தியாவிலிருந்து கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டு வந்தாலும் கூட, போர் பதற்றம் காரணமாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்திய தரப்பில் தாமதமாகிறது.

இந்நிலையில், தவறான வசைச்சொற்களுடன், “Indian embassy dropped me at mumbai airport from there i got no help.i waited for 30 mins but no one was there from indian embassy. i called embassy no one picked up my phone. then i had to book a cab by myseld and reach home. Which costed me 234 rs” என்கிற ஆங்கில வாசகங்களுடன் கூடிய புகைப்படம் ஒன்று ஒரு மாணவியின் புகைப்படத்துடன் பரவி வருகிறது. அதனைப் பலரும் உண்மை என்பதாக பரப்பி வருகின்றனர்.

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்றதா இந்திய அரசு?

Fact Check/Verification

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் மும்பை விமான நிலையத்தில் தன்னை இறக்கி விட்ட இந்திய தூதரகம் அதன்பிறகு அங்கிருந்து தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவதாக, குறிப்பிட்ட புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெண் யார் என்பது குறித்து ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடியபோது, Star of Mysore என்கிற இணைய இதழில் குறிப்பிட்ட புகைப்படத்துடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் அவரது பெயர் ஞானஸ்ரீ சிங் என்றும், அவரது தந்தை பெயர் கணேஷ் சிங் என்றும் இடம்பெற்றிருந்தது. 2019 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவி அவர் என்றும், மூன்றாம் ஆண்டு மாணவியான அவரால் போர் சூழலால் உக்ரைனிலிருந்து நாடு திரும்ப முடியாததால் அவரது தந்தை இந்திய அரசிடம் முறையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து

தொடர்ந்து, அவரது பெயரை வைத்து தேடியதில் சில செய்தி வீடியோக்களும் நமக்கு கிடைத்தன. அதில் அவர் உக்ரைனிலிருந்து பேசிய வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இருந்தே வைரல் மீம் புகைப்படம் க்ராப் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

Source: YouTube
Source: YouTube

மேலும், பல்வேறு மொழிகளிலும் இந்த புகைப்படம் பரவி வருகின்ற சூழலில், தெலுங்கானா மாநில பாஜக உறுப்பினர் கருணா கோபாலும் இதனை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

Source: Twitter

அதன்கீழ் ஒருவர் குறிப்பிட்ட வைரல் புகைப்படம் @beffittingfacts என்கிற பக்கம் மூலமாக கேலியான மீம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த பக்கம், ட்விட்டரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து
Source: Twitter

முன்னதாக, உக்ரைனிலிருந்து மும்பை திரும்பிய மாணவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு நன்றி செலுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source: YouTube

Conclusion

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் மும்பை விமான நிலையத்தில் தன்னை இறக்கி விட்ட இந்திய தூதரகம் அதன்பிறகு அங்கிருந்து தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Source

Star of Mysore

NewsFirstKannada

News 1 Kannada

TOI

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular