Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உக்ரைனிலிருந்து தப்பிக்க இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்று இந்திய தூதரகம் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் இந்தியாவிலிருந்து கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டு வந்தாலும் கூட, போர் பதற்றம் காரணமாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்திய தரப்பில் தாமதமாகிறது.
இந்நிலையில், “கொரோனா பேரிடரின் போது நாட்டு மக்களை நடக்க வைத்து கொலை செய்தவர்கள்!உலக நாடுகள் பல தங்கள் நாட்டு மக்களை உக்ரைனிலிருந்து முன் கூட்டியே மீட்ட போது வேடிக்கை பார்த்து விட்டு இப்போது 1000 கி.மீ நடந்தாவது கடந்து வாருங்கள் என்கிறார்கள் இந்த பாஜக பாசிசவாதிகள்!!இது எவ்வளவு கேவலம்…” என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர்.
ராஜீவ் காந்தி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?
உக்ரைனிலிருந்து தப்பிக்க இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்று இந்திய தூதரகம் கூறியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
உக்ரைனிலிருக்கும் இந்திய தூதரகம் அப்படி எதுவும் அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது குறித்து அறிய அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.
அப்போது, “கார்கிவ்வில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் அவர்களுடைய பாதுகாப்பிற்காக உடனடியாக கிளம்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகனங்கள் கிடைக்காத மாணவர்கள் பிசோசின் (11 கிமீ), பாபய் (12 கிமீ), மற்றும் பெஸ்லியூடோவ்கா (16 கிமீ) உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து வரத்துவங்குங்கள். உக்ரைன் நேரப்படி 1800 மணி (மாலை 6 மணி) நேரத்தில் குறிப்பிட்ட இடங்களை இந்தியர்கள் வந்தடைய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களும் இதனையே செய்திகளில் தெரிவித்துள்ளன. 1000 கிமீ தூரம் நடந்து வரக் கூறியதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. அரசு தரப்பிலும் அப்படி எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
உக்ரைனிலிருந்து தப்பிக்க இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்று இந்திய தூதரகம் கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 25, 2022
Vijayalakshmi Balasubramaniyan
March 3, 2022
Vijayalakshmi Balasubramaniyan
March 9, 2022