ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஉக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலம் குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் எனப்பரவும் பழைய வீடியோ!

உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலம் குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் எனப்பரவும் பழைய வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

உக்ரைன் தலைநகரில் பாரஷூட் மூலமாக குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஏறக்குறைய பல்வேறு மொழிகளிலும் இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.

உக்ரைன்
Source: Facebook

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடுமையாகத் துவங்கி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து சற்றே ஆசுவாசம் அடையத் துவங்கிய உலக நாடுகளுக்கு இந்த போர் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவின் போர்ப்படை உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் முகாமிடத் துவங்கியுள்ளது. “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போரில் யாரேனும் தலையிட்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளுக்கு உள்ளாக நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிட் புதின்.

இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றத்தை முன்வைத்து, ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பான போலியான வீடியோக்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அவ்வகையில், “உக்ரைன் தலைநகரில் பாராஷீட் மூலம் குதித்து தாக்குதலுக்கு தயாராகி வரும் ரஷ்ய வீரர்கள்” என்பதாக பாராஷூட் மூலமாக வீரர்கள் குதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

உக்ரைன்
Source: Facebook

Facebook Link

உக்ரைன்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check/Verification

உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலமாக குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாக மாற்றி yandex மூலமாகத் தேடியபோது அத்தேடலில் “BestLibrary” என்கிற ரஷ்ய வெப்சைட் ஒன்றில் குறிப்பிட்ட வீடியோ நமக்குக் கிடைத்தது.

அந்த இணைப்பில், கடந்த டிசம்பர் 17, 2018ல் குறிப்பிட்ட இந்த வீடியோ ”this is what Russian paratroopers look like” என்பதாக ரஷ்ய மொழியில் அர்த்தம் தொனிக்கும் வகையில் குறியிடப்பட்டிருந்தது. எனினும், அதன் முழு அர்த்தம் இதுதானா என்பது ரஷ்ய மொழியில் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இதே வீடியோ “Alisastom” என்கிற வலைத்தளப் பக்கத்திலும் டிசம்பர் 24, 2018ல் பதிவிடப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.

மீண்டும் மார்ச் 20, 2019ல் இதே வீடியோ மற்றொரு வலைத்தளப்பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.

பதிவிடப்பட்டுள்ள வீடியோ தளங்களில் ஒன்றில் “I Watched this near kostroma” என்கிற கமெண்டும் பதிவாகியுள்ளது.

Kostroma என்பது மேற்கு ரஷ்யாவின் ஆற்றோரப்பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். தொடர்ந்து, நம்முடைய தேடலில் “Made in Russia” என்கிற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 18, 2016ல் பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பதிவில், இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2014 ஆம் ஆண்டு வீடியோவே தற்போதைய உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் என்று பரவுகிறது என்பது நமக்கு உறுதியானது.

Conclusion

உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலமாக குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False Connection/False

Our Sources

NC English

BestLibrary

AlisaStom

Made in RussiaFacebook Page

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular