Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்தியாவின் பெட்ரோல் விலை நேபாளம் மற்றும் இலங்கையை விட கூடுதலாக இருப்பதாக ராஜ்யசபா உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி அவர்கள் கூறி பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இக்கூற்றை கேலியாக,
“ ராமன் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.93
சீதை பிறந்த நேபாளத்தில் பெட்ரோல் விலை ரூ.53
ராவணன் பிறந்த இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.51”
என்று பதிவிட்டுள்ளார்.
டிவிட்டரில் இப்பதிவை இதுவரை 36 ஆயிரம் பேருக்கு மேல் மறுகீச்சு செய்துள்ளனர். ஒரு இலட்சத்து அறுபத்து ஆயரம் பேருக்கு மேல் விரும்பியுள்ளனர்.

Archive Link: https://archive.vn/17yOd
பெட்ரோல், டீசலின் விலையுயர்வு நம் அன்றாடம் பயன்படுத்தும் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வுக்கு வழிவகுப்பதால் இவற்றின் விலையுயர்வு என்பது நம் வாழ்வை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் விஷயமாகும்.
பொதுவாக பெட்ரோலின் விலை என்பது உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த 2010 வரை பெட்ரோலின் விலையை மத்திய அரசே நிர்ணயித்து வந்தது. 2010 ஆம் ஆண்டு இந்தப் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமே அரசு ஒப்படைத்தது. அதாவது, சந்தையை ‘டி-ரெகுலேட்’ செய்து எண்ணெய் நிறுவனங்கள் வசம் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை வழங்கியது.
2014-ம் ஆண்டில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு டீசலின் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது. இதனால், எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.74 க்கு விற்ற பெட்ரோல் படிப்படியாக கூடி தற்போது ரூ. 89க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்தான் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் இவ்வாறு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். சுப்ரமணியன் சுவாமி அவர்களின் இந்த டிவிட்டர் பதிவு ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் மிகப்பெரிய பேசுப் பொருளாக மாறியுள்ளது.
Archive Link: https://archive.vn/EhS3i#selection-3031.3-3031.53
Archive Link: https://archive.vn/7upmI
சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பதிவிட்டதுபோல் பெட்ரோல் விலையானது நேபாளத்தில் ரூ.53க்கும், இலங்கையில் ரூ.51க்கும் விற்பனை ஆகிறதா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
“petrol price in Nepal”, “Petrol price in Srilanka” எனும் கீவேர்டுகளை பயன்படுத்தி இதுக்குறித்து தேடினோம்.
அவ்வாறு தேடியதில் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பதிவிட்ட பதிவு தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
நமது தேடலில், பிப்ரவரி முதல் தேதியிலிருந்து நேபாளத்தில் பெட்ரோலின் விலையானது இந்திய மதிப்பில் ரூ.68.94 ஆகவும், இலங்கையில் ரூ.60.63 ஆகவும் இருப்பதாகவும் தெரிய வந்தது.
இந்தத் தகவலானது globalpetrolprices.Com எனும் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.


இந்த தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது சுப்ரமணியன் சுவாமி பதிவிட்ட கருத்து தவறான ஒன்று என்பது நமக்கு தெளிவாகிறது.
பெட்ரோல் விலையானது நேபாளத்தில் ரூ.53க்கும், இலங்கையில் ரூ.51க்கும் விற்பனை ஆகிறது என்று சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பதிவிட்டது தவறானத் தகவல் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Subramaniyan Swamy: https://twitter.com/Swamy39/status/1356462621373816833
Sun News: https://twitter.com/sunnewstamil/status/1356573356976340992
Puthiya Thalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1356500145492217856
GlobalPetrolPrices.Com:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)