Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நமது முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
நமது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு அளிக்கும் திட்டம் ஒன்றை அண்மையில் அறிவித்தார்.
இதுக்குறித்து பலத்தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களும் கண்டனங்களும் தோன்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று ஒரு இரயில் தடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இத்திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.
இதைப் பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இரயில் தடம் உண்மையிலேயே நேரு அவர்களால்தான் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய வைரலாகும் படத்தை குறித்து நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது, வைரலாகும் இரயில்தடம் குறித்த உண்மைகள் நமக்குத் தெரிய வந்தது.
உண்மையில் நேரு அவர்களால் உருவாக்கப்பட்டது என்று பரப்பப்படும் இரயில்தடமானது இந்தியாவிலேயே இல்லை. அத்தடங்கள் இலண்டன் மாநகரில் உள்ள கிளாபெம் ஜங்ஷனில் உள்ள இரயில் தடமாகும்.
நமது தேடலில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் இரயில் தடமானது இலண்டன் கிளாபெம் ஜங்ஷனுக்கு அருகில் இருக்கும் ரயில் தடம் என்று தெரிய வந்தது. அதை உறுதிப்படுத்த, “railway track near clapham junction” எனும் கீ வேர்டை பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.
அதில், alamy.com எனும் புகைப்பட இணையத் தளத்தில் கிளாபம் ஜங்ஷன் குறித்தப் புகைப்படங்கள் குறித்த பக்கம் இருப்பதை நம்மால் காண முடிந்தது.
அந்தப் பக்கத்தில் நுழைந்து தேடியபோது, வைரலானப் புகைப்படத்தையும் அதிலே நம்மால் காண முடிந்தது.
வாசகர்களின் புரிதலுக்காக வைரலாகும் புகைப்படத்தையும், alamy.com-ல் இடம்பெற்றுள்ளப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று பகிரப்படம் இரயில் தடமானது நேருவால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இலண்டனில் உள்ள இரயில்தடம் என்று தெளிவாகியுள்ளது.
Facebook Profile: https://www.facebook.com/770890773250983/photos/a.770918219914905/1263968547276534/
Facebook Profile: https://www.facebook.com/106633860785016/photos/a.106636294118106/313300186785048/
Twiitter Profile: https://twitter.com/bP8KF3cZyA1Puye/status/1292903094448033792
Twiitter Profile: https://twitter.com/ThenarasuNa/status/1292971173299359744
Getsurrey.co.uk: https://www.getsurrey.co.uk/news/surrey-news/clapham-waterloo-train-delays-live-17272308
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 14, 2024
Ramkumar Kaliamurthy
July 2, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 28, 2023