வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeFact Checkமவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளி சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் நேரு என்று பரவும் எடிட் செய்த...

மவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளி சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் நேரு என்று பரவும் எடிட் செய்த புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளியை சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

மவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளியை சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“மௌண்ட் பேட்டனின் மனைவிக்கு கால் கழுவ பக்கெட்டில் தண்ணீர் கொண்டு போனவன் எல்லாம இந்த தேசத்தின் பிரதமர். அப்புறம் எப்படிடா இந்த தேசம் உருப்படும்?” என்கிற பதிவுடன் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

Screenshot from Twitter @SURULIVEL1971

Archived Link

Screenshot from Facebook/krishna.dhasarathan

Archived Link

Screenshot from Facebook/jagadeesan.jagadeesan.568

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நுழைய அனுமதிக்கப்படவில்லையா?

Fact Check/Verification

மவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளியை சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, Ankur Singh என்கிற ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 29, 2019 அன்று நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் மனைவி இடம்பெற்றிருக்கும் இப்புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், மறைந்த முன்னாள் பிரதமர் நேரு கைகளில் வாளி இடம் பெற்றிருக்கவில்லை.

எனவே, இப்புகைப்படம் குறித்து மேலும் தேடியபோது, ”Himachal Archives” என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் Jawaharlal Nehru, then the Prime Minister, and the Earl & Countess Mountbatten in Simla, during a holiday in May 1948. Courtesy: Photo Division, Government of India என்கிற தலைப்பில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதிலும், நேருவின் கைகளில் வாளி போன்று எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

மேலும், இப்புகைப்படம் picryl, getarchive உள்ளிட்ட தளங்களிலும் இடம்பெற்றுள்ளது. அவற்றிலும் அவரது கைகளில் வாளி போன்ற எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

Original Image
Edited Image

இதன்மூலம், வைரலாகும் புகைப்படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் கைகளில் வாளி போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

Also Read: கரூர் மாவட்ட பாஜகவினர் மற்றும் திமுகவினர் ஆடு திருடியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Conclusion

மவுண்ட்பேட்டன் மனைவிக்காக வாளியை சுமந்து சென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Twitter Post From, Ankur Singh, Dated July 29, 2019

Facebook Post From, Himachal Archives, Dated July 25, 2020
getarchive.net


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular