வியாழக்கிழமை, ஜூலை 4, 2024
வியாழக்கிழமை, ஜூலை 4, 2024

HomeFact Checkநேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் தவறானப் படம்!

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் தவறானப் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டனுடன் இருப்பதாக பரவும் படம்

Fact: வைரலாகும் படத்திலிருப்பவர்கள் நேருவும் எட்வினாவும் அல்ல; அவர்கள் சிலாஸ் கார்ஸன், லூஸி பிளாக் எனும் நடிகர்களாவர்.

“இந்தியாவிற்கு சுதந்திரம் கேட்டு மவுண்பேட்டன் மனைவியிடம் நேரு மாமா போராடிய போது..”  என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்

Archive Link

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்

Archive Link

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்து அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் புகைப்படமானது இலண்டனில் இருக்கும் ஹேம்ப்ஸ்டெட் தியேட்டர் (hampstead theatre) எனும் மேடை நாடக நிறுவனம் நடத்திய ‘drawing the line’ எனும் மேடை நாடகத்தில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படம் என அறிய முடிந்தது.

இந்த நாடகத்தில் நேருவாக சிலாஸ் கார்ஸன் எனும் நடிகரும் எட்வினா மவுண்ட்பேட்டனாக லூஸி பிளாக் எனும் நடிகையும் நடித்துள்ளனர். அவர்கள் இருவருமே வைரலாகும் படத்தில் இடம்பெற்றுள்ளனர் என அறிய முடிந்தது.

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்
Screengrab from hampsteadtheatre.com

தொடர்ந்து தேடுகையில் ஹேம்ப்ஸ்டெட் தியேட்டரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் drawing the line நாடகத்தில்நடித்த நடிகர்கள் அந்த நாடகம் குறித்தும், அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் குறித்தும் பேசி இருப்பதையும் காண முடிந்தது. அதில் நேருவாக நடித்த சிலாஸ் கார்ஸணும் எட்வினாவாக நடித்தா லூஸி கார்ஸனும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

Also Read: ‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று அட்டைப்படம் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

Conclusion

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் புகைப்படம் தவறானதாகும். உண்மையில் அப்படத்தில் இருப்பவர்கள் நேருவும் எட்வினாவும் அல்ல; அவர்கள் சிலாஸ் கார்ஸன், லூஸி பிளாக் எனும் நடிகர்களாவர். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
hampsteadtheatre.com
YouTube Video from Hampstead Theatre
, Dated November 20, 2013

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular