Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக அர்ஜூன் சம்பத் பகிர்ந்த வீடியோ!
Fact: அர்ஜூன் சம்பத் பகிர்ந்த வீடியோவில் இருப்பது இஸ்கான் கோவில் அல்ல; ராஜ் பிரஷாத் எனும் உணவகமாகும்.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவ்வீடியோவை இதுவரை ஏறக்குறைய 16 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
X Link | Archive Link
அர்ஜூன் சம்பத் பகிர்ந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை அணைத்துள்ள தாய் என்று பரவும் AI புகைப்படம்!
வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக அர்ஜூன் சம்பத் பகிர்ந்த வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இத்தேடலில் வங்கதேசத்தின் சத்கிரா மாவட்டத்தில் கலவரக்காரர்கள் சில பகுதிகளை எரித்ததாக கூறி kalbela.com வெளியிட்ட செய்தியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கட்டடத்தின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் பத்திரிக்கையாளர் ஹெச்.பி.ரபிதா என்பவர் வங்கதேச கலவரங்கள் குறித்து அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கட்டடம் கோவில் அல்ல, அது ராஜ் பிரஷாத் எனும் உணவகம் என்று தெரிவித்திருந்தார்.
இதை ஆதாரமாக வைத்து ராஜ் பிரஷாத் எனும் உணவகம் குறித்து தேடுகையில் இந்த உணவகம் குறித்த பல வீடியோக்களை நம்மால் யூடியூபில் காண முடிந்தது. அந்த வீடியோக்களை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த வீடியோக்களில் காணப்பட்ட கட்டிடத்தையும் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கட்டிடத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் இருப்பது இஸ்கான் கோவில் அல்ல; ராஜ் பிரஷாத் உணவகம்தான் என உறுதியானது.
இதனையடுத்து வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் குறித்து ஆராய்ந்தோம். அதில் ‘ISKCON temple targeted in Bangladesh, idols of deities burnt amid unrest’ என்று தலைப்பிட்டு இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம். இதன்படி பார்க்கையில் வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையே என அறிய முடிந்தது.
வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மையே. ஆனால் இஸ்கான கோவில் என்று அர்ஜூன் சம்பத் பகிர்ந்த வீடியோ உண்மையானதல்ல. உண்மையில் வீடியோவில் காணப்படும் கட்டடம் ராஜ் பிரஷாத் எனும் உணவகமாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Kalbela.com, Dated August 05, 2024
Facebook Post from HB Rabita, Journalist, Dated August 05, 2024
Report from India Today, Dated August 06, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 18, 2024
Vasudha Beri
December 17, 2024
Kushel Madhusoodan
December 13, 2024