Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான கேரளாவைச் சேர்ந்த செவிலியரான செளமியா என்பவரது நினைவைப் போற்றும் வகையில் இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையில் ராக்கெட் தாக்குதல்கள் பலமாக நடைபெற்று வருகின்றது. அதனால் ஏற்படும் உயிர்ப்பலிகளும் மற்ற நாடுகளை கொரோனா சூழலில் வேதனைக்கும் பயத்திற்கும் உள்ளாக்கி வருகிறது.
இஸ்ரேலில் வேலை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த இளம் செவிலியர் செளமியா. தெற்கு இஸ்ரேலின் ஆஸ்கெலன் நகரில் இவர் வீடு ஒன்றில் வயதான பெண் ஒருவருக்கு செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 10 ஆம் தேதியன்று ராக்கெட் ரக குண்டு ஒன்று அவர் இருந்த வீட்டை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், “இஸ்ரேல் தனது யுத்த விமானத்திற்கு சௌமியா என்று பெயர் சூட்டி பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தியது. சௌமியா இந்தியாவை சேர்ந்த செவிலியர் சில நாட்களுக்கு முன்னர் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நினைவாகவே இஸ்ரேல் சௌமியா என்று பெயர்சூட்டி அந்த பெண்ணை பெருமைப்படுத்தியுள்ளது. சல்யூட் இஸ்ரேல்” என்கிற புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Facebook Link (Sensitive Content)
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கேரள செவிலியரான செளமியா என்பவரது பெயரை இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு இட்டுள்ளதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதில், சீன மொழியிலான சில தரவுகள் நமக்குக் கிடைத்தன. மேலும், குறிப்பிட்ட விமானத்தில் செளமியா என்கிற ஆங்கிலப் பெயர் பொறிக்கப்படாமல் இருக்கும் உண்மையான புகைப்படங்களும் நமக்குக் கிடைத்தன. தொடர்ந்து, தேடுதலில் கிடைத்த புகைப்படங்களை மீண்டும் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியதில் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது, J-10c என்னும் சீனாவின் பைட்டர் ஜெட் வகை விமானம் என்பது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், வேர்ல்ட் டிபென்ஸ்.காம் என்கிற இணையதளத்தில் சீனாவின் J-10c போர்விமான வகையின் சிறப்பம்சங்களுடன் குறிப்பிட்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதில் செளமியா என்கிற பெயர் இடம்பெறவில்லை.
மேலும், daydaynews என்கிற செய்தி இணையதளம் ஒன்றிலும் குறிப்பிட்ட புகைப்படங்களுடனான செய்தி இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, கிடைத்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த @央广军事 என்கிற சீனமொழி வார்த்தைகளை மொழி பெயர்த்தபோது, Yāng guǎng jūnshì என்கிற மொழியாக்கம் நமக்குக் கிடைத்தது. அது சீன ராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற செய்தித்தளம் என்பதும் நமக்குத் தெரிய வந்தது.
Weibo என்கிற சீனாவின் மைக்ரோப்ளாகிங் இணையப்பக்கத்தில் இப்புகைப்படங்கள் இடப்பட்டுள்ளன என்பதும் நமக்குத் தெரிய வந்தது.
சீனா, பாகிஸ்தானுக்கு தன்னுடைய பைட்டர் வகை விமானங்களை விற்பதாக ஒரு செய்தி உலா வந்தாலும், இஸ்ரேலுக்கும் குறிப்பிட்ட சீன போர்விமான புகைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது இதன்மூலமாக தெரிய வருகிறது.
மேலும், வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வீரர் அணிந்திருக்கும் ராணுவ உடை சீன ராணுவத்தினருடையது.
எனவே, வைரலாகும் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தில் Soumya என்னும் ஆங்கில எழுத்துக்கள் எடிட் செய்து சேர்க்கப்பட்டுள்ளது நமக்குத் தெளிவாகியது.
FAKEIMAGE
ORIGINAL IMAGE
Conclusion:
இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கேரள செவிலியரான செளமியா என்பவரது பெயரை இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு இட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
DayDayNews: https://daydaynews.cc/en/military/457874.html
World Defense.com: https://world-defense.com/threads/china-sells-j-10-fourth-generation-fighters-to-pakistan.7856/page-10
Quora: https://armchairgenerals.quora.com/J-10C-updates-3
Global Times: https://www.globaltimes.cn/content/1111809.shtml
Global Times: https://www.globaltimes.cn/page/202003/1181486.shtml
@央广军事: http://military.cnr.cn/zgjq/
Defense News: https://www.defensenews.com/global/asia-pacific/2021/05/11/china-fields-j-10-jets-powered-by-homemade-engine/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.