Fact Check
பாகிஸ்தான் கடற்படைத்தளத்தை பலுசிஸ்தான் தாக்கியதாக பரவும் வீடியோ செய்தி உண்மையா?
Claim
பாகிஸ்தான் கடற்படைத்தளத்தை தாக்கிய பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்
Fact
வைரலாகும் வீடியோ இஸ்ரேல் பெய்ரூட் மீது நடத்திய தாக்குதல் ஆகும்.
பாகிஸ்தான் கடற்படைத்தளத்தை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இது பலிசிஸ்தானில் உள்ள ஜி ன்னா கடற்படை தளம்.
பாகிஸ்தானில் கராச்சியை அடு த்து பலுசிஸ்தானில் தான் பாகிஸ்தானின் 2 வது பெரிய கடற்படை தளம் இருக்கிறது. அதன்
பெயர் ஜின்னா கடற்படை தளம். இது பலுசிஸ்தானில் உள்ள குவாடர் மாவட்டத்தில் உள்ள ஓர்மரா என்கிற நகரத்தில் இரு க்கிறது.
குவாடரில் உள்ள குவாடர் துறை முகம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தக துறைமுகம்.இதுதான் இந்தியாவின் டார்கெட்.
இந்த குவாடர் துறைமுகத்திற்கு சுமார் 300 கிலோ மீட்டர் தொ லைவில் தான் பாகிஸ்தானின் 2 வது பெரிய கடற்படை தளமான ஜின்னா கடற்படை தளம் இருக்கிறது. இந்த ஜின்னா கடற்படை தளத்தை பலுசிஸ்தான் விடுதலை ஆர்மி தாக்கி இருப்பதாக தெரி
கிறது” என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
பாகிஸ்தான் கடற்படைத்தளத்தை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்கியதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 2024ஆம் ஆண்டு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுவதைக் காண முடிந்தது.
தொடர்ந்து, நாம் தேடியபோது OSINTdefender கடந்த அக்டோபர் 06, 2024 அன்று வெளியிட்டிருந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், இஸ்ரேல் பெய்ரூட் மீது நடத்திய தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வீடியோக்களில் உள்ள தாக்குதலும், வைரலாகும் வீடியோ காட்சியும் ஒன்றே என்பதை அறிய முடிந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படைத்தளமான சித்திக் மீது தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், ஜின்னா கடற்படைத்தளம் மீதான தாக்குதல் குறித்து எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, கடந்த 2024ஆம் ஆண்டு இஸ்ரேல் பெய்ரூட் மீது நடத்திய தாக்குதல் வீடியோவே பாகிஸ்தான் ஜின்னா கடற்படைத்தளம் மீது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் நடத்திய தாக்குதல் என்று பரவுகிறது என்பது உறுதியானது.
Also Read: ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Conclusion
பாகிஸ்தான் கடற்படைத்தளத்தை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்கியதாகப் பரவும் வீடியோ 2024ஆம் ஆண்டு இஸ்ரேல் பெய்ரூட் மீது நடத்திய தாக்குதலுடன் தொடர்புடையது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post from OSINTdefender, Dated October 06 , 2024
Report From, TOI, Dated March 26, 2024