Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
டெல்லி விவசாயிகள் போராட்டம் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

புதிய வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள தொடர்ந்து இரண்டு மாதங்களாக போராடி வந்தனர்.
கடந்த செவ்வாய்( 26/01/2021) அன்று டிராக்டர் பேரணி செல்வதாக முடிவெடுக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. அமைதியாக தொடங்கப்பட்ட பேரணி ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இக்கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியக் குடியரசு தினத்தில் இவ்வாறு ஒரு கலவரம் ஏற்பட்டது அனைவர் மனதிலும் மிகப்பெரிய கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கலவரம் குறித்து ஒவ்வொருவரும் அவரவருக்கு தோன்றும் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இக்கலவரம் காரணமாக விவசாயிகள் இரண்டு மாதங்களாக நடத்தி வந்த போராட்டத்தை முழுமையாக வாபஸ் வாங்கியதாக தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/0NZh3
Archive Link: https://archive.vn/WIh6I
Archive Link: https://archive.vn/YNB76
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இத்தகவலை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மைதானா என்பதை அறிய இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.
அவ்வாறு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது. விவசாயிகள் போராட்டம் வாபஸ் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை விவசாயிகள் சங்கத்தினர் முழுமையாக மறுத்துள்ளனர்.
உண்மையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்குப்பெற்றிருந்த அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி மற்றும் பாரதிய கிசான் சங் (பானு) என்ற இரு விவசாய அமைப்புகள் மட்டுமே போராட்டத்தில் இருந்து வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளனர்.
இவ்விரு அமைப்புகளை தவிர்த்து மற்ற அமைப்பினர், வேளாண் சட்டங்கள் முழுமையாக திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றே கூறியுள்ளனர்.
“ஜனவரி 26 அன்று நடந்தக் கலவரத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், ஆனால் தங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.”

முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதி பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அம்முடிவு தற்போது கைவிடப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய அமைப்பினர் கூறியுள்ளனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவியத் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விலக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1354443713666117638
Dinamalar: https://twitter.com/dinamalarweb/status/1354402633012932611
India Tv News: https://www.indiatvnews.com/news/india/parliament-march-cancelled-february-1-farmers-yogendra-yadav-apologises-protest-continues-680895
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 21, 2024
Vijayalakshmi Balasubramaniyan
February 6, 2021
Vijayalakshmi Balasubramaniyan
February 13, 2021