Sunday, March 16, 2025
தமிழ்

Fact Check

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட பெண் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டாரா?

banner_image

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று, அசாதுதீன் ஓவைசீயின் குடியுரிமைச் சட்டத்திருத்த மாநாட்டில் கோஷமிட்ட பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண்ணான அமுல்யா லியோனா, டெல்லி விவசாயிகள் மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார் என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Source: Twitter

Fact Check/ Verification:

டெல்லியில் புதிய வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

டெல்லியில் போராடி வருகின்ற விவசாயிகளுக்கு நாடு முழுவதுமே, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும், மற்ற துறையினரும், சமூக ஆர்வலர்களும் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் டெல்லிக்கே நேரடியாகச் சென்று விவசாயிகள் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை நல்கி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான மாநாட்டில் அசாதுதீன் ஓவைசியின் முன்னிலையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமெழுப்பிய அமுல்யா லியோனா என்கிற இளம்பெண், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/malathyj1508/status/1354568709730226176?s=20
Source: Twitter

Archived Link: https://archive.vn/SWpwG#selection-2857.0-2857.78

https://archive.st/anushabinny/status/1357545299820961792

https://archive.vn/1qbpR

Source: Whatsapp

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

பெங்களூருவில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்ட அமுல்யாவும், டெல்லி போராட்டத்தில் இடம்பெற்றுள்ள இளம்பெண்ணும் ஒருவரா என்பதை அறிய அதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டோம்.

அதன்முடிவில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அப்புகைப்படத்தில் நிற்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலரான சம்ஸ் வளர்மதி என்பதைக் கண்டறிந்தோம்.

மேலும், இதுகுறித்து அவர் தனது முகப்புத்தக்கத்திலேயே அப்புகைப்படத்தை வெளியிட்டு, அதுகுறித்த பதிவினையும் இட்டுள்ளார்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=291963445979128u0026amp;id=100054964252806
Source: Twitter

Archived Link: https://archive.vn/D3QdR

தொடர்ந்து, பெங்களூரு போராட்டத்தில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்ட அமுல்யா லியோனா குறித்த வெளிவந்த செய்திகளையும் நாம் கண்டறிந்தோம். அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளோம்.

இதன்மூலமாக, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட வளர்மதியும், பெங்களூருவில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்ட அமுல்யாவும் வெவ்வேறு என்பதை தெளிவாக விளக்கியுள்ளோம்.

Conclusion:

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்ட இளம்பெண், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று பரவும் செய்தி தவறானது; உண்மையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலரான வளர்மதி என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே, வாசகர்கள் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Result: False

Our Sources:

Valarmathi sums: https://www.facebook.com/profile.php?id=100054964252806

The Hans India: https://www.thehansindia.com/news/national/watch-woman-chants-pakistan-zindabad-at-asaduddin-owaisis-rally-in-bengaluru-606421

BBC: https://www.bbc.com/news/world-asia-india-51531988

The Indian Express: https://indianexpress.com/article/explained/who-is-amulya-leona-the-girl-arrested-for-her-pro-pakistan-slogans-6279898/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.