Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் என்று ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வந்துள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கர்நாடகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், ஒரு நடிகராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் வந்து, பலப் போராட்டங்களுக்குப்பின் திரையுலகில் வென்று, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத பல அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
கறுத்த முகம், வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு என எதையெல்லாம் அவரின் குறையாக ஆரம்ப காலத்தில் கூறப்பட்டதோ, அவற்றையே தன் பாணியாக மாற்றி தமிழ் திரையுலகை தன் பின்னாள் வர செய்தவர்.
சினிமாவுக்கு பின் அரசியல் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆகையால் இவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அழைத்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, தான் அரசியலுக்கு வரவிருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்தார்.
ஆனாலும் கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து எதுவும் அப்போது தெரியப்படுத்தவில்லை. இச்சம்பவம் நடந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் இவர்கட்சி தொடங்கியபாடில்லை.
ஆனாலும் இந்த மூன்று ஆண்டுகளில் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து பல விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது இவர் பாஜகவுக்காக மறைமுகமாக வேலை செய்கிறார் என்கிற விமர்சனமாகும்.
இந்த விமர்சனத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ ரஜினிகாந்த் அவர்கள் பகிரங்கமாக எந்த ஒரு கருத்தையும் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழகத்திற்கு வருகைப் புரிந்தார்.
ரஜினிகாந்த் அவர்களை அமித்ஷா சந்திப்பார் என்று பரவலாக அனைவரும் எதிர்பாத்திருந்த நிலையில், ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அவரின் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் ஒன்று மாலை முரசு உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்தது.
ஊடகங்களில் வெளிவந்த இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆய்வு செய்தோம்.
ரஜினிகாந்த் குறித்து பரவும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்துத் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், புதியத் தலைமுறையின் டிவிட்டர் பக்கத்தில்,
“நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மையில்லை. அவர் நலமுடன் போயஸ் இல்லத்தில் உள்ளார்.”
என்று PRO ரியாஸ் அவர்கள் கூறியதாகச் செய்தி ஒன்று வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
புதிய தலைமுறையின் இச்செய்திப்படி பார்த்தால் பார்த்தால் ஊடகங்களில் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் என்று வெளிவந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்பது நமக்குத் தெளிவாகிறது.
ரஜினிகாந்த அவர்களுக்கு காய்ச்சல் என்று மாலை முரசு ஊடகங்களில் வெளிவந்தச் செய்தியானது முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Malai Murasu: https://twitter.com/MalaimurasuTv/status/1330394360324743168
Naradhar TV: https://twitter.com/Onlynarathar/status/1330405128281542656
Lotus News: https://twitter.com/LotusNews_24x7/status/1330396130035851270
Puthiya Thalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2030069497149948
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
October 11, 2024
Ramkumar Kaliamurthy
July 8, 2024
Ramkumar Kaliamurthy
August 23, 2023