Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஜக்கி வாசுதேவ், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசியதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பில், பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கோவையில் ஈஷா யோகா மையத்தை நடத்தி வருகின்ற சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், இந்துக் கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து சாதுக்களிடம் விட வேண்டும் என்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
தொடர்ந்து, திமுக தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததில் இருந்து அரசுக்கும், ஜக்கி வாசுதேவுக்கும் இடையிலான பனிப்போர் ஆரம்பம் என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. காட்டுப்பகுதியை ஆக்கிரமித்து ஜக்கி வாசுதேவ் யோகா மையத்தை நிர்மாணித்திருப்பதாகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சத்குரு என்றழைக்கப்படுகிற வாசுதேவ், முதல்வரது இல்லத்தில் சந்தித்தாகவும், அவரை கனிமொழி எம்.பி, துரைமுருகன் எம்.எல்.ஏ ஆகியோர் உபசரித்து உரையாடியது போன்ற புகைப்படம் ஒன்று “வெளியில நாங்க ஆயிரம் விமர்சிப்போம்…யாருக்கும் தெரியாம வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிப்போம்……” என்கிற வாசகங்களுடன் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஜக்கி வாசுதேவ், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்தோம்.
அப்போது, குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பது நமக்கு உறுதியானது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வர்களுள் ஒருவருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவ், கருணாநிதியின் உடல்நலம் குறித்த விசாரிக்க முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.
மேலும், ஜக்கி வாசுதேவ் மற்றும் இன்றி இன்றைய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பியைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜக்கி வாசுதேவ், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
TOI:https://www.youtube.com/watch?v=nup2F8V11qM
Zee Hindustan:https://zeenews.india.com/tamil/social/sadhguru-jaggi-vasudev-inquired-about-karunanidhis-health-310152
News7 Tamil: https://www.youtube.com/watch?v=UjX4x0gjt38
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2025