திமுக பிரமுகர்கள் சிலர் இணைந்து சேலம் மேற்கு தொகுதியின் பாமக எம்.எல்.ஏ அருள் ராமதாஸ் பெயரில் போலி டோக்கன் வழங்கியதாகவும், அதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ அருள் ராமதாஸ், மாம்பழம் சின்னம் பொறித்த டோக்கனை வைத்திருக்கும் நபர்கள் என் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வந்து அதனை நேரில் கொடுத்துவிட்டு ரூபாய் 2000 பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்ததாகப் போஸ்டர் ஒன்று வைரலாகியது.

இதுகுறித்து, குறிப்பிட்ட அந்த போஸ்டர் போலியானது என்றும், தான் அதுபோன்ற எந்த போஸ்டரையும் வெளியிடவில்லை; டோக்கனும் வழங்கவில்லை என்றும், தனது பெயருக்கும் பதவிக்கும் வாக்காளர்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவர்களைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், “ஓட்டுக்கு ரூ 2000 தருவதாக போலியான மாம்பழம் சின்னம் அச்சிட்ட டோக்கன் வழங்கிய சேலம் மாவட்ட திமுக பிரமுகர்கள் நான்கு பேர் கைது; திமுக அலுவலகத்தை முற்றுகையிட்ட சேலம் மேற்கு தொகுதி பெண்கள்” என்று நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனம் செய்தி ஒன்று வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
திமுக பிரமுகர்கள் சிலர், பாமக எம்.எல்.ஏ பெயரில் ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதாக நியூஸ்7 நிறுவனம் செய்தி வெளியிட்டதாகப் பரவிய புகைப்படம் குறித்த உண்மைநிலை அறிய அது குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
முதலில், குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த எழுத்துக்கள் நியூஸ் 7 செய்தி நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களை ஒத்து இருக்கவில்லை.

மேலும், நியூஸ் 7 நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்தபோது அவர்கள் நியூஸ் 7 வெளியிட்டதாகப் பரவிய புகைப்படம் போலியானது என்று தெரிவித்திருந்தனர்.

மேலும், நியூஸ் 7 நிறுவன செய்தியாளர்களும் இதனை உறுதிப்படுத்தினர்.
Conclusion:
திமுக பிரமுகர்கள் சிலர், பாமக எம்.எல்.ஏ பெயரில் ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதாக நியூஸ்7 நிறுவனம் செய்தி வெளியிட்டதாகப் பரவிய புகைப்படம் தவறானதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
News7 Tamil: https://www.facebook.com/news7tamil/posts/4704158362979668
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)