ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் 

Fact: வைரலாகும் வீடியோ ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்ததாகும்.

ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“கவனமாக இரு. இந்துக்களின் ஒரு தவறான வாக்கு இந்தியாவை நமது தேசத்தின் இஸ்லாமியமயமாக்கலை நோக்கி தள்ளும் ஏற்கனவே கர்நாடகாவில் நடக்கிறது த்வஜ வந்தனாவின் போது பர்காவில் பெண் கலெக்டர் பரேட் பரிசோதனையின் போது கூட அவள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஐ பார்க்க. பிரான்சில் இப்படிதான் தொடங்கியது” என்று இந்த வீடியோ வைரலாகிறது.

Screenshot from X @NaMo_Bharathan

Archived Link

ஹிஜாப்
Screenshot from Facebook/DesiyaSanghi

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?

Fact Check/Verification

ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.  

வைரலாகும் வீடியோவில் Fast News என்கிற லோகோ இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து அது குறித்து ஆராய்ந்தோம். அதன்முடிவில்,குறிப்பிட்ட ஊடகத்தின் சமூக வலைத்தளப்பக்கத்தின் மூலம் இந்த வீடியோ கர்நாடகவைச் சேர்ந்தது அல்ல என்று நம்மால் அறிய முடிந்தது.

அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள ஊடகப்பக்கத்தில் வைரலாகும் வீடியோ காட்சி முழுமையாக வெளியாகியிருந்தது. அதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்த்வார் மாவட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் குறிப்பிட்ட பெண்மணி ஹிஜாப் அணிந்து கொடியேற்றும் வீடியோ முழுமையாக இடம்பெற்றுள்ளது.

Kistwar Headlines என்கிற யூடியூப் பக்கத்தில் ”Saima Perveen_DDC Vice Chairperson addressed Public on the Occasion of Independence Day Celebration” என்று இந்த வீடியோவின் முழு வீடியோக்காட்சி வெளியாகியிருந்தது. 

இதுகுறித்து வெளியாகியிருந்த செய்திகளிலும், சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த கிஷ்த்வார் மாவட்டத்தின் செளகான் மைதானத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் துணைத்தலைவரான சைமா பர்வீன் லோன் மற்றும் எஸ்பி கலீல் அகமத் போஸ்வால் ஆகியோரின் முன்பு சுதந்திர தின விழா அணிவகுப்பு நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் புகைப்படங்கள் District Administration Kishtwar-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.  

மேலும், Zulfkar Ali Kishtwar என்கிற உள்ளூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்நிகழ்வின் லைவ் வீடியோ இடம்பெற்றுள்ளது.

எனவே, வைரல் வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டது அல்ல; ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது.

Also Read: ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?

Conclusion

ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Fast News, Dated August 15, 2023
Facebook Post From, District Administration Kishtwar, Dated August 15, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular