வெள்ளிக்கிழமை, மே 3, 2024
வெள்ளிக்கிழமை, மே 3, 2024

HomeFact Checkதமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் 'மூன் வாக்' சென்றாரா?

தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றார்.

Fact: வைரலாகும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல; கர்நாடகாவின் பெங்களூரில் எடுக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் தமிழகத்தின் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அந்த வீடியோவில் விண்வெளி உடையில் ஒருவர் நிலவில் நடப்பதுபோல் அடிமேல் அடி வைத்து குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் நடந்து வருவதாக இருந்தது.

தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக பரவும் வீடியோ

Twitter Link | Archived Link

தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக பரவும் வீடியோ

Archived Link

தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக பரவும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க கட்டாயப்படுத்தியதா பாஜக?

Fact Check/Verification

தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்த உண்மையை அறிய, அவ்வீடியோவை புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் இவ்வீடியோவானது கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த பாதல் நஞ்சுண்டசுவாமி எனும் 3டி கலைஞரால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. பெங்களூர் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை கிண்டல் செய்யும் விதமாக இவ்வீடியோவை  உருவாக்கி, செப்டம்பர் 02, 2019 அன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பாதல் பகிர்ந்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தை இவ்வீடியோ ஈர்த்ததை தொடர்ந்து, இவ்வீடியோவானது ஊடகங்களில் பெரும் செய்திப் பொருளாக அச்சமயத்தில் மாறியதை நம்மால் காண முடிந்தது.

இதனை தொடர்ந்து  ஆராய்கையில் பாதல் நஞ்சுண்டசுவாமி இதுபோன்ற விழிப்புணர்வு செயல்களை தொடர்ந்து தனது ஓவியங்கள் வழியாக செய்து வருவதை காண முடிந்தது.

Instagram will load in the frontend.
Instagram will load in the frontend.

கிடைத்த ஆதாரங்களின் வழியாக காண்கையில் கர்நாடகாவின் பெங்களூரில் எடுக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக கூறி பொய்யான தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது நமக்கு தெளிவாகியது

Also Read: ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?

Conclusion

தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. அது உண்மையில் அது கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களின் வாயிலாக தெளிவு செய்துள்ளோம். 

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Baadal Nanjundaswamy, Dated September 02, 2019
Report from Mirror Now
Report from India Today

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular