Fact Check
சிறுமியைக் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் என்று பரவும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததா?
Claim
வடக்கர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகுது. தமிழர்களை அழிக்காமல் திமுக ஓயாது
Fact
வைரலாகும் வீடியோ கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவமாகும்.
சிறுமியைக் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் என்று வீடியோ ஒன்று தமிழகத்தைச் சேர்ந்தது என்பதாகப் பரவி வருகிறது.
”வடக்கர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகுது. தமிழர்களை அழிக்காமல் திமுக ஓயாது Innerline permit கொடுக்கிறதுல உங்களுக்கு என்னதான்டா பிரச்சனை சிறுமியை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற 2 வடமாநில இளைஞர்கள் – நடுங்கவைக்கும் சிசிடிவி” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
சிறுமியைக் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் என்று பரவும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்தது என்பதாகப் பரவுவதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி வீடியோ தந்தி டிவி வெளியிட்டிருந்த நிலையில், வீடியோவின் ஓரத்திலேயே அது கர்நாடகாவில் நடைபெற்றது என்று சிறியதாக இடம்பெற்றுள்ளது.
எனவே, அச்சம்பவம் குறித்து ஆராய்ந்தபோது கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள சந்தாபுரம் என்கிற பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட அப்பெண்ணை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அவரது காதலரான ஆஷிக் என்பவரே அவரைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்தது தெரியவந்துள்ளது. செய்திகளிலும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற இந்த கொலையே தமிழகத்துடன் தொடர்புபடுத்தி தவறான நோக்கில் பரப்பப்படுகிறது.
Also Read: செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றதா ரிசர்வ் வங்கி?
Conclusion
சிறுமியைக் கொலை செய்த வடமாநில இளைஞர்கள் என்று பரவும் வீடியோ கர்நாடகாவில் நடைபெற்றது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By Thanthi TV, Dated June 09, 2025
News Report from, Power Tv News, Dated May 21, 2025