Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி திமுகவிலிருது விலகவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கனிமொழி கட்சியிலிருந்து விலகுவதாக”தகவல் கசிந்துள்ளதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also Read: உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா பாஜக?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கனிமொழி திமுகவிலிருது விலகவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் நியூஸ் 7 தமிழ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று நியூஸ் 7 தமிழ் மறுப்பு வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.
இதனையடுத்து திமுக ஐடி விங்கை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, இத்தகவல் பொய்யானது என்று அவர்கள் உறுதி செய்தனர்.
நமது விரிவான ஆய்வுக்குப்பின், கனிமொழி திமுகவிலிருது விலகவிருப்பதாக கூறி வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது தெளிவாகின்றது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Newschecker Conversations
News 7 Tamil Tweet on 23rd March
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025