உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக என்று வீடியோவுடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

உத்திர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திர பிரதேச தேர்தல் வரலாற்றில் இது நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், “உத்ரப்பிரதேசத்தில் வித்தியாசமான எலக்சன் நடைபெற்றது யாரும் சென்று ஓட்டு போட வேண்டாம் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் ஓட்டுக்கு 500 ரூபாய் தருகிறார்கள் மை வைத்து சென்று விடுவார்கள். ஓட்டு பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களே போட்டுக் கொள்வார்கள்.” என்பதாக வீடியோ ஒன்றுடன் கூடிய பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம் என்று பரவும் ஆஸ்திரிய போராட்டம் ஒன்றின் வீடியோ!
Fact Check/Verification
உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் வீடியோ நியூஸ் 18 உடையது என்பது தெரிய வந்த நிலையில், வீடியோ காட்சிகளைப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். மேலும், கீவேர்டு மூலமாகவும் இணையத்தில் தேடினோம்.
அதன் முடிவில், குறிப்பிட்ட வீடியோ காட்சியானது கடந்த 2019 ஆம் ஆண்டு உபி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தபோது எடுக்கப்பட்டது என்பதும்; உத்திர பிரதேச சந்தெளலி தொகுதியில் வாக்களர்கள் சிலருக்கு வாக்களிக்காமல் இருக்க பாஜக பணம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர் என்பதும் நமக்கு தெரியவந்தது.
பல்வேறு ஊடகங்களும் குறிப்பிட்ட வாக்களார்களின் வாக்குமூலங்களை வீடியோவாக வெளியிட்டுருந்தன.
இதுகுறித்து, தற்போது உத்திர பிரதேச காவல்துறை அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
எனவே, பழைய வீடியோ ஒன்றே இவ்வாறு புதியது போன்று பரவுகிறது என்பது உறுதியானது.
Conclusion
உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக என்று பரவும் வீடியோ தகவல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
UP Police
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)